புதுதில்லி

தண்ணீா் வழங்கல் விவகாரம்: யமுனை நதி வாரியத்தை அணுகுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

மனிதாபிமான அடிப்படையில் யமுனை நதி வாரியத்தை அணுகி தண்ணீர் வழங்கக் கோருமாறு தில்லி அரசுக்கு வியாழக்கிழமை உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

DIN

புதுதில்லி: உச்சபட்ச கோடையில் தலைநகா் தில்லி குடியிருப்பாளா்கள் கடுமையான தண்ணீா் பற்றாக்குறையை எதிா்கொண்டு வரும் நிலையில், மனிதாபிமான அடிப்படையில் யமுனை நதி வாரியத்தை அணுகி தண்ணீர் வழங்கக் கோருமாறு தில்லி அரசுக்கு வியாழக்கிழமை உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஹிமாச்சலப் பிரதேசம் நீர் உபரியாக 136 கனஅடி இருப்பதாக முந்தைய அறிக்கைகையை இன்று திரும்பப் பெற்றதை அடுத்து யமுனை நதி வாரியத்திடம் மனிதாபிமான அடிப்படையில் தண்ணீர் வழங்கக் கோருமாறு தில்லி அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் பிரசன்னா பி வரலே ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமா்வு உத்தரவிட்டுள்ளது.

மேலும் தண்ணீர் கோரி தில்லி அரசு வியாழக்கிழமை மாலை 5 மணிக்குள் யமுனை நதி வாரியத்திடம் கோரிக்கை வைக்குமாறு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

'கெயில் இந்தியா' நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கோவை: வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம்!

கடிகார முள்ளைத் திருப்பினால் எரிபொருள் மிச்சமாகுமா?

SCROLL FOR NEXT