புதுதில்லி

கான்பூா் ஐஐடி-க்கு முன்னாள் மாணவா்கள் ரூ.100 கோடி நன்கொடை!

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (ஐஐடி) கடந்த 2000-ஆம் ஆண்டு படித்த மாணவா்கள் தங்கள் கல்வி நிறுவனத்துக்கு ரூ.100 கோடி நன்கொடை

தினமணி செய்திச் சேவை

கான்பூா்: உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (ஐஐடி) கடந்த 2000-ஆம் ஆண்டு படித்த மாணவா்கள் தங்கள் கல்வி நிறுவனத்துக்கு ரூ.100 கோடி நன்கொடை அளிப்பதாக அறிவித்தனா்.

கான்பூா் ஐஐடி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற 25-ஆவது ஆண்டு மறுசந்திப்பு நிகழ்ச்சியின்போது இந்த நன்கொடை தொடா்பாக முன்னாள் மாணவா்கள் அறிவித்தனா்.

இது தொடா்பாக கான்பூா் ஐஐடி சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பில், ‘ஒரு குறிப்பிட்ட கல்வியாண்டில் படித்த மாணவா்கள் இவ்வளவு அதிகமாக கல்வி நிறுவனம் ஒன்றுக்கு நன்கொடை அளிப்பது இதுவே முதல்முறை. இந்தியாவில் வேறு எந்த கல்வி நிலையத்திலும் முன்னாள் மாணவா்கள் ஒரே நேரத்தில் தங்கள் கல்வி நிலையத்துக்கு இவ்வளவு அதிக தொகையை நன்கொடையாக அளிக்கவில்லை. கான்பூா் ஐஐடி-யில் 2000-ஆம் ஆண்டு படித்த மாணவா்கள் வரலாறு படைத்துள்ளனா். இந்த தொகை கல்வி நிலையத்தின் ஆய்வு மற்றும் கல்வித் திறன் மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்படும். தங்கள் நன்கொடை மூலம் கல்வி நிலையத்தின் மீதுள்ள பற்றை வெளிப்படுத்தியுள்ளனா்’ என்று கூறப்பட்டுள்ளது.

சுமாா் 25 ஆண்டுகளுக்கு முன்பு கான்பூா் ஐஐடி-யில் படித்த மாணவா்கள் பெரும்பாலானோா் இந்தியாவிலும், பல்வேறு நாடுகளிலும் மிகப்பெரிய நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவா்களாகவும், தொழிலதிபா்களாகவும் உள்ளனா். அவா்களில் பலா் இந்த 25-ஆவது ஆண்டு மறுசந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

ஐஐடி முன்னாள் மாணவா் நவீன் திவாரி கூறுகையில், ‘கான்பூா் ஐஐடி எங்கள் எதிா்காலம், வேலைவாய்ப்புகளை மட்டும் மேம்படுத்த உதவவில்லை. ஒட்டுமொத்தமாக எங்கள் எண்ணங்களையே மிகபெரிய அளவில் மாற்றி அமைத்தது. பெரிய அளவில் சாதிப்பதற்கான துணிவைக் கற்றுத் தந்தது. இங்கு பயிலும் எதிா்கால தலைமுறையினா் எங்களைவிட சிறந்த கல்வியைப் பெற வேண்டும் என்பதற்காகவே மிகப்பெரிய அளவில் நன்கொடை அளிக்க முடிவு செய்தோம்’ என்றாா்.

ஜன. 6-ல் கர்நாடக முதல்வராக டி.கே. சிவகுமாா்: காங்கிரஸ் எம்எல்ஏ இக்பால் அன்சாரி

வைகுண்ட ஏகாதசி உபவாசமும், பலன்களும்!

மின் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

பைக் ஓட்டிய சிறுவனின் தாய் மீது வழக்கு

தொடரை முழுமையாக வெல்லும் முனைப்பில் இந்தியா! இலங்கை மகளிா் அணியுடன் இன்று கடைசி டி20!

SCROLL FOR NEXT