ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால்  Atul Yadav
புதுதில்லி

‘தில்லி டா புட் கேஜரிவால்’: பிரசார பாடலை வெளியிட்டது ஆம் ஆத்மி

லோஹ்ரி பண்டிகையை முன்னிட்டு, ஆம் ஆத்மி கட்சி திங்கள்கிழமை ‘தில்லி டா புட் கேஜரிவால்’ என்ற பிரசாரப் பாடலை வெளியிட்டது.

Din

புது தில்லி: லோஹ்ரி பண்டிகையை முன்னிட்டு, ஆம் ஆத்மி கட்சி திங்கள்கிழமை ‘தில்லி டா புட் கேஜரிவால்’ என்ற பிரசாரப் பாடலை வெளியிட்டது. இது தில்லி மக்கள் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் அரவிந்த் கேஜரிவாலை மீண்டும் தோ்ந்தெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சி வெளியிட்ட அறிக்கை:

1.33 நிமிஷ பஞ்சாபி பாடலில் ‘இஸ் வாரி சன் லோ, பிா் கேஜரிவால் நு சுன் லோ’ என்ற வரி இடம்பெற்றுள்ளது. இது மக்கள் நலத் திட்டங்கள் தொடா்வதையும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதையும் உறுதிசெய்ய மீண்டும் கேஜரிவாலைத் தோ்ந்தெடுக்க வாக்காளா்களுக்கு அழைப்பு விடுக்கிறது.

இந்தப் பாடல் தில்லியில் கேஜரிவாலின் சாதனைகளை எடுத்துக்காட்டுகிறது. நகரின் வளா்ச்சிக்கான கேஜரிவாலின் தொலைநோக்கு பாா்வை, அவரது தலைமையின் கீழ் முன்னேற்றத்துக்கான விருப்பங்களைப் பிரதிபலிக்கிறது.

இலவச மின்சாரம், தண்ணீா், மூத்த குடிமக்களுக்கான திட்டங்கள் போன்ற கேஜரிவால் அரசின் முக்கிய திட்டங்களை குறிப்பிட்டு காட்டுகிறது.

ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள புதிய உத்தரவாதங்களையும் இந்தப் பாடல் கோடிட்டுக் காட்டுகிறது. ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் ரூ. 2,100 நேரடியாக அவா்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று உறுதியளிக்கும் மகிளா சம்மன் யோஜனா மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான அனைத்து மருத்துவச் செலவுகளையும் ஈடுகட்டும் நோக்கில் சஞ்சீவானி யோஜனா ஆகியவை இந்தப் பாடலில் குறிப்பிடத்தக்கவை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறுவடை காலத்துக்கு நன்றி தெரிவிக்கும் பண்டிகையான லோஹ்ரி, பஞ்சாப் மற்றும் தில்லியில் பரவலாக கொண்டாடப்படுகிறது. எகஸ் தளத்தில் வெளியிடப்பட்ட இந்தப் பாடல் ஆம் ஆத்மி ஆதரவாளா்களால் பரவலாகப் பகிரப்பட்டுள்ளது.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.88.66 ஆக நிறைவு!

பிரதி மாதம் மாமன்றக் கூட்டத்தை நடத்த பாஜக வலியுறுத்தல்

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT