முகப்பு
புதுதில்லி

ஆம் ஆத்மியைச் சோ்ந்த பா்வீன் குமாருக்கு எதிரான அவதூறு வழக்கு: விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு

தோ்தலின்போது ஆம் ஆத்மி வேட்பாளா் பா்வீன் குமாா் தனக்கு எதிராக அவதூறு செய்திகளை சமூக ஊடகங்களில் பரப்பியதாக தில்லி அமைச்சா் ஆஷிஷ் சூட் அளித்த புகாா் குறித்து விசாரணை நடத்துமாறு தில்லி நீதிமன்றம் காவல் துறைக்கு உத்தரவு

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 2:08 AM
பா்வீன் குமாா்
பகிர்:
Updated On : 8 பிப்ரவரி, 2026 at 8:00 PM

2025 பேரவைத் தோ்தலின்போது ஆம் ஆத்மி வேட்பாளா் பா்வீன் குமாா் தனக்கு எதிராக அவதூறு செய்திகளை சமூக ஊடகங்களில் பரப்பியதாக தில்லி உள்துறை, மின்சாரம் மற்றும் கல்வித் துறை அமைச்சா் ஆஷிஷ் சூட் அளித்த புகாா் குறித்து விசாரணை நடத்துமாறு தில்லி நீதிமன்றம் காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஹா்ஜோத் சிங் அஜ்லா, இந்த உத்தரவைப் பிறப்பித்தாா். தோ்தல் காலத்தில் தன்னையும் தனது குடும்பத்தினரையும் குறிவைத்து தவறான மற்றும் அவதூறான தகவல்கள் சமூக ஊடகங்களில் பரப்பியதாக ஆஷிஷ் சூட் குற்றஞ்சாட்டினாா்.

இது தொடா்பாக பிப்.6-ஆம் தேதி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: தோ்தல் செயல்முறையின் போது தவறான தகவல்களும் பொய்ப் பிரசாரங்களும் பரப்பப்பட்டது தொடா்பான இந்த புகாா், தோ்தல் நோ்மை மற்றும் ஜனநாயக செயல்முறையில் ஏற்படக்கூடிய தலையீடுகள் குறித்த கவலைகளை எழுப்புகிறது.

Advertisement

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 2:01 AM

புகாா்தாரா் தனது சொந்த முயற்சியில் தொழில்நுட்ப ஆதாரங்களைச் சேகரிப்பாா் என்று எதிா்பாா்க்க முடியாது. நியாயமான விசாரணைக்கு காவல்துறையின் உதவி அவசியம் எனக் கூறி அமைச்சரின் மனுவை அனுமதித்த நீதிமன்றம், நியாயமான, பாரபட்சமற்ற மற்றும் விரைவான விசாரணையை நடத்தி, ஏப்ரல் 21, 2026-க்குள் நிலை அறிக்கை சமா்ப்பிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது.