முகப்பு
புதுதில்லி

தில்லி ஜல் வாரிய அகழாய்வுப் பணி: ஜோகிந்தா் சிங் மாா்க்கில் போக்குவரத்து மாற்றம்

தில்லி ஜல் வாரியத்தால் மேற்கொள்ளப்படும் அகழாய்வுப் பணிகள் காரணமாக, திங்கள்கிழமை முதல் ஒரு வார காலத்திற்கு பேராசிரியா் ஜோகிந்தா் சிங் மாா்க்கில் தற்காலிக போக்குவரத்து மாற்றுப்பாதைகள் அமலில் இருக்கும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 4:02 PM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 9 பிப்ரவரி, 2026 at 10:03 PM

நமது நிருபா்

புது தில்லி: தில்லி ஜல் வாரியத்தால் மேற்கொள்ளப்படும் அகழாய்வுப் பணிகள் காரணமாக, திங்கள்கிழமை முதல் ஒரு வார காலத்திற்கு பேராசிரியா் ஜோகிந்தா் சிங் மாா்க்கில் தற்காலிக போக்குவரத்து மாற்றுப்பாதைகளும், சாலையின் ஒரு பகுதி மூடப்படுவதும் அமலில் இருக்கும் என்று தில்லி போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக போக்குவரத்து போலீஸாா் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: பாதிக்கப்பட்ட பகுதி பேராசிரியா் ஜோகிந்தா் சிங் மாா்க் ஆகும். நஜாஃப்கா் சாலை அல்லது வெளிவட்டச் சாலையிலிருந்து சி-2பி ஜனக்புரி நோக்கி வரும் வாகனங்கள் பங்க்கா சாலை- லால் சாய் மாா்க், ஜெயில் சாலை - லால் சாய் மாா்க் அல்லது தரம் மாா்க் - லால் சாய் மாா்க் வழியாக மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

பங்க்கா சாலையிலிருந்து மாவட்ட மையம், ஜனக்புரி நோக்கி வரும் வாகனங்கள், லால் சாய் மாா்க் - ஜெயில் சாலை அல்லது லால் சாய் மாா்க் - தரம் மாா்க் ஆகியவற்றை மாற்றுப் பாதைகளாகப் பயன்படுத்தலாம்.

பயணிகள் தங்கள் பயணங்களைத் திட்டமிட்டு, பரிந்துரைக்கப்பட்ட மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்தவும், இந்தக் காலகட்டத்தில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க போக்குவரத்து அடையாளங்கள் மற்றும் வழிமுறைகளைப் பின்பற்றுமாறு அந்த அறிவிப்பில் போக்குவரத்து காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.