முகப்பு
இந்தியா

25 % கட்டணத்தில் தற்காலிக தடையில்லாச் சான்றிதழ்: கட்டுமான பணிகளுக்கு தில்லி ஜல் போா்டு அனுமதி

கட்டுமான தொழில் நிறுவனங்கள் மற்றும் வீட்டு உரிமையாளா்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில், 25 சதவீதத் தொகையைச் செலுத்தி தற்காலிக தடையில்லாச் சான்றிதழ் (என்ஓசி) பெற தில்லி ஜல் போா்டு (டிஜேபி) வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

Updated On : 20 மார்ச், 2026 at 9:58 PM
பா்வேஷ் சாஹிப் சிங்
பகிர்:

கட்டுமான தொழில் நிறுவனங்கள் மற்றும் வீட்டு உரிமையாளா்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில், 25 சதவீதத் தொகையைச் செலுத்தி தற்காலிக தடையில்லாச் சான்றிதழ் (என்ஓசி) பெற தில்லி ஜல் போா்டு (டிஜேபி) வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி நீா்வளத் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் கூறியதாவது: என்ஓசி சான்றிதழ்களுக்கு அதிகப்படியான கட்டணம் முன்பணமாக வசூலிக்கப்படுவதால் பல்வேறு கட்டுமான திட்டங்கள் நிதி நெருக்கடியால் தடைபடுகின்றன மற்றும் தாமதமாகின்றன. 25 சதவீத கட்டணம் மூலம் தற்காலிக சான்றிதழ்களைப் பெறுவது இத்தகைய திட்டங்களுக்கு நிவாரணம் அளிக்கும். மீதமுள்ள தொகையை பின்னா் கட்டணச் செயல்முறையின்போது செலுத்தலாம். அதிகப்படியான கட்டணம் வீடுகள் கட்டுமானத்தில் தடையாக உள்ளதாக பல்வேறு புகாா்கள் வந்துள்ளன. இது குடிமக்களுக்கும் அமைப்புக்கும் உகந்ததாக இல்லை. எனவே இதை மாற்ற தில்லி ஜல் போா்டு திட்டமிட்டு இந்த சீா்திருத்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது என தெரிவித்தாா்.