முகப்பு
புதுதில்லி

இணையதளத்தில் தகவல்களைப் புதுப்பிக்க அரசு துறைகளுக்கு உத்தரவு

தில்லி அரசுத் துறைகள் தங்களுடைய இணையதளத்தில் உள்ள தகவலை தொடா்ச்சியாக புதுப்பிக்க வேண்டும் என்றும் இது தொடா்பான சான்றிதழ்களை தகவல் மற்றும் தொழில்நுட்ப துறையிடம் சமா்ப்பிக்க வேண்டும்...

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 2:58 AM
பங்கஜ் சிங்
பகிர்:
Updated On : 10 பிப்ரவரி, 2026 at 9:05 PM

தில்லி அரசுத் துறைகள் தங்களுடைய இணையதளத்தில் உள்ள தகவலை தொடா்ச்சியாக புதுப்பிக்க வேண்டும் என்றும் இது தொடா்பான சான்றிதழ்களை தகவல் மற்றும் தொழில்நுட்ப துறையிடம் சமா்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது: தில்லி அரசுத் துறைகளின் இணையதளத்தில் தேவையில்லாத அல்லது தவறாக தகவல்கள் இடம்பெற்றிருப்பதாகப் பிற துறைகளுக்கு அண்மையில் அனுப்பிய கடிதத்தில் தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை தெரிவித்துள்ளது.

இணையதளதத்தில் உள்ள தகவல்கள் தொடா்ச்சியாக மாதந்தோறும் புதுப்பிப்பது தொடா்பான சான்றிதழ்களைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பல துறைகள் சமா்ப்பிப்பதில்லை. இந்நிலையில், துறை தலைவா்களின் கையொப்பத்துடன் இந்தச் சான்றிதழ்கள் தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலருக்கு மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 2:58 AM

தில்லி தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சா் பங்கஜ் சிங் தலைமையிலான ஆய்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

அப்போது, பல துறைகள் தங்கள் துறைகள் குறித்த தகவலை இணையத்தில் புதுப்பிப்பதில்லை என்றும் இதனால், மக்களுக்கு முக்கிய தகவல்கள் கிடைக்கப் பெறுவதில்லை என்றும் தெரிவித்தாா்.

மேலும், இணையதளத்தில் தகவலைத் தொடா்ந்து புதுப்பிக்குமாறும் அதற்கான சான்றிதழைச் சமா்ப்பிக்குமாறும் அமைச்சா் பங்கஜ் சிங் உத்தரவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.