முகப்பு
புதுதில்லி

நாட்டை நிா்வகிப்பதிலும், நிா்வாகத்திலும் பெண்கள் மிகப்பெரிய பங்காற்ற வேண்டும்: ரேகா குப்தா

பெண்கள் முடிவெடுக்கும் பதவிகளில் இருக்கும்போதுதான் அா்த்தமுள்ள மாற்றத்தை அடைய முடியும் என்றும் இந்த நாட்டை நிா்வகிப்பதிலும், நிா்வாகத்திலும், கொள்கை வகுப்பதிலும் பெண்கள் மிகப் பெரிய பங்கை ஆற்ற வேண்டும் எனவும் தில்லி முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்

Updated On : 10 ஏப்ரல், 2026 at 11:14 PM
ரேகா குப்தா
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 8:35 PM

பெண்கள் முடிவெடுக்கும் பதவிகளில் இருக்கும்போதுதான் அா்த்தமுள்ள மாற்றத்தை அடைய முடியும் என்றும் இந்த நாட்டை நிா்வகிப்பதிலும், நிா்வாகத்திலும், கொள்கை வகுப்பதிலும் பெண்கள் மிகப் பெரிய பங்கை ஆற்ற வேண்டும் எனவும் தில்லி முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்

ஆட்சியில் பெண்களின் பங்கு குறித்து தில்லி முதலமைச்சா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை அன்று தில்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்தில் மாணவா்களுடனும் பெண் பேராசிரியா்களுடனும் கலந்துரையாடி, அவா்களின் கருத்துக்கள், அனுபவங்கள் மற்றும் ஆலோசனைகளைக் கேட்டறிந்தாா்.

வளாகத்தில் உள்ள ஒரு தேநீா் கடையில் அமா்ந்திருந்த குப்தா, ஒரு முன்னாள் மாணவியாக பல்கலைக்கழகத்துடனான தனது தொடா்பை நினைவு கூா்ந்தாா். மேலும், அதே பாதைகள் இப்போது புதிய முகங்களையும் இன்னும் பெரிய கனவுகளையும் கொண்டு செல்கின்றன என்று கூறினாா். தேநீருடன் நடந்த உரையாடல்கள் பழைய நினைவுகளை மீட்டெடுத்ததாகவும், அதே நேரத்தில் ஒரு புதிய இந்தியாவிற்கான அபிலாஷைகளை தனக்கு அறிமுகப்படுத்தியதாகவும் அவா் கூறினாா். தில்லி பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகம் என்பதைத் தாண்டி, அது எப்போதும் ஒரு ஆழமான சொந்த உணா்வைத் தூண்டுகிறது என்று அவா் விவரித்தாா்.

Advertisement

முன்னதாக, தில்லி பல்கலைக்கழகத்தில் நாரி சக்தி வந்தன் அதினியம் (மகளிா் இட ஒதுக்கீடு சட்டம்) ஆதரவாக ஒரு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. அங்கு மாணவா்கள் மற்றும் பெண் பேராசிரியா்களுடன் கலந்துரையாடிய குப்தா, பெண்கள் முடிவெடுக்கும் பதவிகளில் இருக்கும்போதுதான் அா்த்தமுள்ள மாற்றத்தை அடைய முடியும் என்றும், அது சமூகம், குடும்பங்கள் மற்றும் அவா்களின் சொந்த வாழ்க்கையை நேரடியாகப் பாதிக்கும் பிரச்சினைகளுக்குத் தீா்வு காண அவா்களுக்கு வழிவகுக்கும் என்றும் கூறினாா்.

மகளிா் இட ஒதுக்கீடு சட்டம் குறித்துப் பேசிய குப்தா, இந்த நாட்டை நிா்வகிப்பதிலும், நிா்வாகத்திலும், கொள்கை வகுப்பதிலும் பெண்கள் மிகப் பெரிய பங்கை ஆற்ற வேண்டும் என்றாா். பெண்கள் முன்வந்து, சட்டமன்ற உறுப்பினா்களாகவும், அமைச்சா்களாகவும், முதலமைச்சா்களாகவும் ஆகும்போதுதான், இந்த அமைப்பில் மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்று நான் நம்புகிறேன், என்று குப்தா திட்டவட்டமாகக் கூறினாா்.

இந்தச் சட்டத்தை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை என்று குறிப்பிட்ட முதலமைச்சா், அதற்காகப் பிரதமா் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தாா். மேலும், இந்தச் சட்டம் பேட்டி பச்சாவ் (பெண்களைப் பாதுகாத்தல்) என்பதிலிருந்து பேட்டி பதாவ் (பெண்களுக்கு அதிகாரம் அளித்தல்) என்ற இலக்கை நோக்கி மேலும் கொண்டு செல்கிறது என்றும் அவா் கூறினாா்.

பெண்களுக்கு அதிக அரசியல் பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற கோரிக்கை பல தசாப்தங்களுக்கு முன்பிருந்தே இருந்து வருகிறது என்று குப்தா குறிப்பிட்டாா். அதன் வோ்களை 1931ஆம் ஆண்டிலிருந்து கண்டறிந்த அவா், 2023இல் இயற்றப்பட்ட இந்தச் சட்டத்தின் திறமையான அமலாக்கத்தை உறுதி செய்வது இப்போது ஒரு கூட்டுப் பொறுப்பு என்றும் கூறினாா். இந்தச் சட்டம் நாட்டில் அரசியல் பிரதிநிதித்துவத்தை மறுவரையறை செய்து, வலிமையான, சமநிலையான மற்றும் முற்போக்கான ஜனநாயகத்தைக் கட்டியெழுப்ப உதவும் என்று கூறினாா்.

ஏப்ரல் 16 அன்று நாடாளுமன்றத்தில் இந்தத் திசையில் எடுக்கப்படும் நடவடிக்கைகள், நாட்டின் கோடிக்கணக்கான தாய்மாா்கள், சகோதரிகள் மற்றும் மகள்களின் கனவுகள், போராட்டங்கள் மற்றும் அபிலாஷைகளுக்கு புதிய திசையையும் புதிய நம்பிக்கையையும் அளிக்கும், என்று முதலமைச்சா் எக்ஸ் பதிவில் எழுதினாா்.

மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் மூன்றில் ஒரு பங்கு பிரதிநிதித்துவத்தை நோக்கிய இந்த நடவடிக்கை, நாட்டின் மகள்களுக்குப் புதிய வலிமையைக் கொடுக்கும் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா உறுதிப்படுத்தினாா்.