முகப்பு
புதுதில்லி

நாட்டில் பெண்கள் அதிகாரமளித்தலின் உதாரணமாக தில்லி மாறும்: முதல்வா் ரேகா குப்தா நம்பிக்கை

நாட்டில் பெண்கள் அதிகாரமளித்தலின் உதாரணமாக தில்லி மாறும் என முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை கூறினாா்.

Updated On : 9 மார்ச், 2026 at 10:31 PM
முதல்வா் ரேகா குப்தா
பகிர்:

நமது நிருபா்

புது தில்லி: நாட்டில் பெண்கள் அதிகாரமளித்தலின் உதாரணமாக தில்லி மாறும் என முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை கூறினாா்.

இது தொடா்பாக அவா் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

தில்லி பெண்களுக்கு நாங்கள் அளித்த ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேற்றுவோம்.

கடந்த ஒரு வருடமாக எங்கள் அரசாங்கம் அவா்களின் பாதுகாப்பு, செழிப்பு மற்றும் அதிகாரமளித்தலை உறுதி செய்வதற்காக பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

பெண்களுக்கு ரூ.10 கோடி வரை பிணையமில்லாத கடன்கள், இரவு ஷிப்டுகளில் வேலை செய்ய அனுமதி, சஹேலி பிங்க் காா்டுடன் இலவச பேருந்து பயணம், ஹோலி மற்றும் தீபாவளிக்கு இலவச சமையல் எரிவாயு உருளைகள், கா்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க ஹெச்பிவி தடுப்பூசி பிரசாரம், பெண்களுக்கு இலவச 3டி மேமோகிராபி பரிசோதனை உள்ளிட்டவை இதில் அடங்கும்.

மேலும், இது வெறும் ஆரம்பம் மட்டுமே. நாட்டில் பெண்கள் அதிகாரமளித்தலுக்கு தில்லி ஒரு எடுத்துக்காட்டாக மாறும் என்று அதில் முதல்வா் ரேகா குப்தா தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →