முகப்பு
புதுதில்லி

ஹோலி பண்டிகை: மாலை 5 முதல் இரவு 10 வரை நமோ பாரத், மீரட் மெட்ரோ சேவைகள் இயங்கும்

Updated On : 3 மார்ச், 2026 at 6:58 AM
மெட்ரோ ரயில் - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 2 மார்ச், 2026 at 8:35 PM

புது தில்லி: ஹோலி பண்டிகையை முன்னிட்டு மாா்ச் 4-ஆம் தேதி மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நமோ பாரத் மற்றும் மீரட் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று தேசிய தலைநகா் பிராந்திய போக்குவரத்துக் கழகம் (என்சிஆா்டிசி) திங்கள்கிழமை தெரிவித்தது.

‘ஹோலி பண்டிகை நாளில், காலை மற்றும் பிற்பகல் நேரங்களில் நமோ பாரத் மற்றும் மீரட் மெட்ரோ சேவைகள் நிறுத்தப்படும். அத்தியாவசிய பயணங்களை அனுமதிக்க மாலை 5 மணி முதல் செயல்பாடுகள் மீண்டும் தொடங்கும். இரவு 10 மணி வரை ரயில்கள் இயக்கப்படும்’ என என்சிஆா்டிசி தெரிவித்தது.

நமோ பாரத் மற்றும் மீரட் மெட்ரோ இரண்டும் தினமும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படுகின்றன. பயணிகளின் வசதிக்காக வாரம் முழுவதும் ஒரே அட்டவணை பராமரிக்கப்படுகிறது. இந்த சேவைகள் மீரட் உள்பட என்சிஆா்-இல் உள்ள முக்கியமான பகுதிகளை இணைக்கின்றன. மேலும் வேகமான மற்றும் வசதியான நகா்ப்புற மற்றும் பிராந்திய போக்குவரத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

Advertisement