முகப்பு
புதுதில்லி

வாகனத் திருட்டு: இருவர் கைது

தில்லி கீர்த்தி நகர் பகுதியில் வாகனத் திருட்டில் ஈடுபட்டதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Updated On : 10 ஏப்ரல், 2018 at 4:36 AM
பகிர்:

தில்லி கீர்த்தி நகர் பகுதியில் வாகனத் திருட்டில் ஈடுபட்டதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து நான்கு ஸ்கூட்டிகள், ஒரு மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து தில்லி காவல் துறையினர் திங்கள்கிழமை கூறியதாவது: சம்பவத்தன்று கீர்த்தி நகர் போலீஸார் அப்பகுதியில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ரனீஷ் நகர் பகுதியில் இருவர் வாகனத் திருட்டில் ஈடுபட்டது அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மூலம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சஞ்சீவ், சதீஷ் ஆகியோருக்கு தெரிய வந்தது.
இதையடுத்து, அப்பகுதி நஜஃப்கர் சாலைப் பகுதியில் போலீஸார் சாதாரண உடையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் மோட்டார்சைக்கிளில் வந்த இருவரைப் பிடித்து விசாரித்தனர். அவர்கள் திருட்டு வாகனத்தில் வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டனர். 
அவர்கள் சுபாஷ் நகரைச் சேர்ந்த விபின் குமார், லலித் காஷ்யப் ஆகியோர் என விசாரணையில் தெரிய வந்தது. கொள்ளை, வழிப்பறியில் ஈடுபடும் பொருட்டு இருவரும் வாகனங்களைத் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களிடமிருந்து நான்கு திருட்டு ஸ்கூட்டிகள், ஒரு மோட்டார்சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பல்வேறு காவல் நிலையங்களில் அவர்கள் இருவரும் எட்டு திருட்டு வழங்குகளில் சம்பந்தப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக மேல் விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.