புதுதில்லி

எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் போல நடித்து ஏமாற்ற முயன்ற இளைஞர் கைது

DIN

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் போல நடித்து ஏமாற்ற முயன்றதாக பிகாரைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். 
இது குறித்து தில்லி காவல் துறையின் தெற்கு காவல் துணை ஆணையர் ரோமில் பானியா கூறியதாவது: 
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சம்பவத்தன்று மருத்துவர் உடையில் இளைஞர் ஒருவர் மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைய முயன்றார். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாவலாளி அவரிடம் விசாரித்தார். அப்போது, அருகில் இருந்த மருத்துவர்கள் அந்த நபரிடம் மருத்துவ ரீதியாக கேள்வி கேட்டனர். அவரால் பதில் அளிக்க முடியவில்லை. இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகத்திற்குப் புகார் தெரிவித்தனர்.
இது குறித்து மருத்துவமனை அதிகாரி அளித்த தகவலின் பேரில் சம்பந்தப்பட்ட இளைஞரை பிடித்து போலீஸார் விசாரித்தனர். அவர் பிகார் மாநிலம், சீதாமர்ஹி மாவட்டத்தை சேர்ந்த ஆத்னம் குர்ரம் (19) என்பதும், 10-ஆம் வகுப்பு வரை படித்த போலி மருத்துவர் என்பதும் தெரிய வந்தது. 
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது சகோதரிக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வகையில் மருத்துவர்களிடம் நேரம் வாங்க இதுபோன்று வேடமிட்டு நாடகமாட முயன்றதாக அவர் கூறினார். கைது செய்யப்பட்ட அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டதாக அதிகாரி ரோமில் பானியா கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

SCROLL FOR NEXT