புதுதில்லி

போலி டிக்கெட்டுடன் விமான நிலையத்துக்குள் நுழைந்த உஸ்பெகிஸ்தான் பெண் கைது

DIN

போலி விமான டிக்கெட் மூலம் தில்லி விமான நிலையத்திற்குள் நுழைந்த உஸ்பெகிஸ்தான் நாட்டு பெண்ணை மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் (சிஐஎஸ்எஃப்) பிடித்து தில்லி காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக தில்லி விமான நிலைய சிஐஎஸ்எஃப் அதிகாரி கூறியதாவது: தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையப் பகுதியில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் சம்பவத்தன்று வழக்கமான கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மூன்றாவது முனையப் பகுதியில் இருந்து வெளியேற முயன்ற பெண்ணிடம் சிஐஎஸ்எஃப் வீரர்கள் விசாரணை மேற்கொண்டனர். அவர் ரத்து செய்யப்பட்ட விமான பயணச்சீட்டை வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும், உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கே. ஷக்ஸோடா என்பதும் தெரிய வந்தது. தாஸ்கண்ட் செல்லும் தனது தாயை வழியனுப்புவதற்காக விமான நிலைய முனையத்திற்குள் சென்றதாகக் கூறினார். அவர் போலி டிக்கெட் வைத்திருந்ததால் விசாரணைக்காக தில்லி காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

SCROLL FOR NEXT