புதுதில்லி

கேரள வெள்ள நிவாரணத்துக்கு  ரூ. 1 கோடி: இடிஎம்சி முடிவு

DIN

கேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ. 1 கோடி வசூலித்து அளிக்கப்படும் என கிழக்கு தில்லி மாநகராட்சி (இடிஎம்சி) அறிவித்துள்ளது.
இது குறித்து அதன் மேயர் பிபின் பிகாரி சிங் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: கிழக்கு தில்லி மாநகராட்சி நிதி நெருக்கடியை சந்தித்து வந்தாலும், பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநில மக்களின் துயர் துடைக்கும் பணியில் பங்கெடுக்க விரும்புகிறது. இதன் ஒரு பகுதியாக கேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ. 1 கோடி வசூலித்து அளிக்கப்படும். வெள்ள நிவாரணத்துக்கு கிழக்கு தில்லி மாநகராட்சி அதிகாரிகளும், ஊழியர்களும் நன்கொடை அளித்து வருகின்றனர். இத்துடன் கிழக்கு தில்லி மாநகராட்சி கவுன்சிலர்களும் அவர்களால் இயன்ற தொகையை நன்கொடையாக அளித்து வருகின்றனர்.
கிழக்கு தில்லி மாநகராட்சியின் குரூப் ஏ-பிரிவு அதிகாரிகள் தலா ரூ. 2 ஆயிரமும், பி-பிரிவு அதிகாரிகள் தலா ரூ. 1,500, சி-பிரிவு அதிகாரிகள் தலா ரூ. 500, டி-பிரிவு அதிகாரிகள் ரூ. 250 என்ற வீதத்தில் வெள்ள நிவாரணத்துக்கு  அளித்து வருகின்றனர். கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் கிழக்கு தில்லிவாசிகள் நிதியளித்து உதவ வேண்டும் என்றார் அவர். 
கேரள வெள்ள நிவாரணத்துக்கு, தெற்கு தில்லி மாநகராட்சி (எஸ்டிஎம்சி) கவுன்சிலர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களது ஒருநாள் ஊதியத்தை அளிக்க முடிவு செய்தனர். மேலும், மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர்கள் ஓராண்டு படித் தொகையை கூடுதலாக வழங்கவும் கடந்த புதன்கிழமை முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT