முகப்பு
புதுதில்லி

யமுனையில் கொசுப் பெருக்கத்தை தடுக்க கிழக்கு தில்லி மாநகராட்சி தீவிரம்

யமுனை ஆற்றில் கொசுப் பெருக்கத்தை தடுக்கும் நடவடிக்கைகளில் கிழக்கு தில்லி மாநகராட்சி (இடிஎம்சி) மும்முரமாக ஈடுபட்டு வருவதாக மேயர் பிபின் பிகாரி சிங் தெரிவித்தார்.

Updated On : 9 ஜூலை, 2018 at 5:39 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

யமுனை ஆற்றில் கொசுப் பெருக்கத்தை தடுக்கும் நடவடிக்கைகளில் கிழக்கு தில்லி மாநகராட்சி (இடிஎம்சி) மும்முரமாக ஈடுபட்டு வருவதாக மேயர் பிபின் பிகாரி சிங் தெரிவித்தார்.
இதுதொடர்பாக ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தில்லியில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், யமுனை ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து, யமுனை ஆற்றில் கொசுப் பெருக்கம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொசுப் பெருக்கம் அதிகரித்தால், கொசுக்களால் பரவும் நோய்கள் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும். எனவே,  கொசுப் பெருக்கத்தைத் தடுக்கும் வகையில், யமுனை ஆற்றில் மருந்து தெளிக்கும் பணி சனிக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.
இடிஎம்சி சுகாதாரத் துறை ஊழியர்கள் யமுனை ஆற்றில் படகில் பயணம் செய்து நதியெங்கும் கொசுப் பெருக்கத்தை தடுக்கும் மருந்தைத் தெளித்து வருகின்றனர். மேலும்,  ஆற்றின் கரையோரங்களிலும் மருந்துகள் தெளிக்கப்படுகின்றன. இதற்காக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.  ஒரு முறை மருந்து தெளித்தால் 2 வாரங்களுக்கு கொசுப் பெருக்கத்தை அது தடுக்கும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.