புதுதில்லி

851 அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் குறைப்பு

DIN

கடந்த இரு ஆண்டுகளில் 851 அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மன்சுக் எல்.மாண்டவியா செவ்வாய்க்கிழமை எழுத்துமூலம் அளித்த பதில்:
234 அத்தியாவசிய மருந்துகளின் விலைகளை அரசு 5 சதவீதம் வரை குறைத்துள்ளது. 134 மருந்துகளின் விலைகள் 5 முதல் 10 சதவீதம் வரையும் 98 மருந்துகளின் விலைகள் 10 முதல் 15 சதவீதம் வரையும் குறைக்கப்பட்டன. 98 வகை அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் 15 முதல் 20 சதவீதம் வரையிலும், 93 மருந்துகளின் விலைகள் 20 முதல் 24 சதவீதம் வரையிலும் குறைக்கப்பட்டன.
தேசிய மருந்து விலைக் கட்டுப்பாட்டு ஆணையம் 65 மருந்துகளின் விலைகளை 25 முதல் 430 சதவீதம் வரையும், 46 மருந்துகளின் விலைகளை 30 முதல் 35 சதவீதம் வரையும் 24 மருந்துகளின் விலைகளை 35 முதல் 40 சதவீதம் வரையும் 59 மருந்துகளின் விலைகளை 40 சதவீதம் வரையும் குறைத்துள்ளன என்று அவர் தனது பதிலில்  தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT