முகப்பு
புதுதில்லி

கர்நாடக முதல்வர் பதவியேற்பு நிகழ்வில் கேஜரிவால் பங்கேற்புக்கு பாஜக கண்டனம்

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி கர்நாடக முதல்வராகப் பதவியேற்கும் விழாவில் தில்லி முதல்வர் அரவிந்த்

Updated On : 21 மே, 2018 at 11:47 PM
பகிர்:

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி கர்நாடக முதல்வராகப் பதவியேற்கும் விழாவில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கலந்துகொள்ள உள்ளதாக அறிவித்துள்ளதற்கு தில்லி சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்பதன் மூலம் காங்கிரஸுக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையேயான ரகசிய உறவு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தங்களிடையே கருத்து வேறுபாடு உள்ளதாக காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் கூறி வந்தாலும், இருவரும் பிரதமர் மோடிக்கு எதிராக இயங்குபவர்கள் என்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது.
சோனியா காந்தி, ராகுல் காந்தியின் ஆசீர்வாதத்துடன் நேர்மையற்ற முறையில் கர்நாடகாவில் உருவாகவுள்ள அரசுக்கு தன்னுடைய ஆதரவை வழங்கியதன் மூலம் நேர்மைக்கும் ஆம் ஆத்மிக்கும் சம்பந்தம் இல்லை என்பதை கேஜரிவால் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.