புதுதில்லி

குடியரசு தின விழா சிறப்பு விருந்தினர் தென்னாப்பிரிக்க அதிபர்?

DIN

அடுத்த ஆண்டு குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா  கலந்து கொள்ளலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு இந்தியா விடுத்த அழைப்பை அவர் நிராகரித்ததை அடுத்து ராமபோசாவை அழைக்க அரசு முடிவெடுத்துள்ளது என்றும், சிறப்பு விருந்தினராக டிரம்பை மட்டும் அழைக்க எண்ணவில்லை; வேறு சில தலைவர்களை அழைக்கும் எண்ணமும் இருந்தது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக உலக தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பதை இந்தியா வழக்கமாக கொண்டுள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஆசியான் அமைப்பில் உள்ள 10 நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர். 
2016-ஆம் ஆண்டு குடியரசு தினத்தில் பிரான்ஸ் அதிபர் ஹோலந்தே கலந்து  கொண்டார்.  2015-ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா வருகை தந்தார். 2014-ஆம் ஆண்டு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே குடியரசு தின விழாவுக்கு வருகை தந்திருந்தார்.
இதுவரை ரஷிய அதிபர் விளாதிமர் புதின், மறைந்த தென்னாப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலா உள்ளிட்ட பல தலைவர்கள் இந்திய குடியரசு தின விழாவில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

SCROLL FOR NEXT