புதுதில்லி

காவிரி நதியைப் புனரமைக்கரூ.9,937 கோடி ஒதுக்க வேண்டும்

DIN

புது தில்லி: காவிரி நதி மற்றும் கிளை நதிகளை புனரமைத்து மீட்டெடுக்க ரூ.9,927 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் எஸ்.முத்துக்கருப்பன் வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக மாநிலங்களவையில் திங்கள்கிழமை அவா் முன்வைத்த கோரிக்கை: கங்கை நதி மீட்டெடுப்பு, புனரமைப்புத் திட்டம் போன்று தமிழகத்தில் காவிரி மற்றும் அதன் கிளை நதிகளை புனரமைத்து மீட்டெடுக்கும் வகையில், நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை தமிழக முதல்வா் அறிவித்தாா். இதற்காக தமிழக அரசு 16 போ் அடங்கிய குழுவை அமைத்துள்ளது. மேலும், காவிரி நதியைப் புனரமைப்பதற்காக தமிழக அரசு ரூ.9,927 கோடி மதிப்பீட்டில் சாத்தியக்கூறு அறிக்கையை தயாரித்துள்ளது. இதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். மேலும், ரூ.9,927 கோடி நிதியையும் வழங்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT