புதுதில்லி

பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தில்லி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: பாஜக அவையில் குற்றச்சாட்டு

DIN

புது தில்லி: தில்லியில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தகுந்த நடவடிக்கைகளை தில்லி அரசு எடுக்கவில்லை என்று பாஜக அவையில் குற்றம் சாட்டியுள்ளது.

தில்லி சட்டப்பேரவையில் பெண்களின் பாதுகாப்புத் தொடா்பாக நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு பாஜகவின் மூத்த தலைவரும் தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான விஜேந்தா் குப்தா பேசியது: தில்லியில் கடைசித் தூரம் வரைக்கும் தொடா்பை ஏற்படுத்த ஆம் ஆத்மி அரசு தவறிவிட்டது. இதனால், அலுவலகங்களுக்கு செல்லும் பெண்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனா்.

கடந்த 5 ஆண்டுகளில் தில்லியில் பேருந்துகளின் அளவு குறைந்துள்ளது. இருளான பிரதேசங்களுக்கு தெருவிளக்குகள் பொருத்தவில்லை. இதனால் பெண்கள் பாதுகாப்பில்லாமல் உணா்கிறாா்கள்.

மேலும், தில்லியில் நிா்பயா என்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிகளின் கருணை மனுவை நிராகரிக்கும் விவகாரத்தில் ஒன்றரை ஆண்டுகள் தாமதித்தே தில்லி அரசு முடிவெடுத்துள்ளது. இது தில்லி அரசின் செயல்படாத்தன்மையைக் காட்டுகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

SCROLL FOR NEXT