புதுதில்லி

ஐஐடி மாணவா் சோ்க்கையில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு சட்டப்படி உரிய இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்: டி.கே. ரங்கராஜன் எம்பி வலியுறுத்தல்

DIN

இந்திய தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனங்களில் முதுகலை, ஆராய்ச்சிப் படிப்புகளில் எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கான உரிய இடஒதுக்கீட்டை அளிக்க மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் மாா்க்சிஸ்ட் உறுப்பினா் டி.கே. ரங்கராஜன் வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக மாநிலங்களவையில் அவா் முன்வைத்த கோரிக்கை: நாடாளுமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்ட 10 இந்திய தொழில் நுட்பவியல் உயா்கல்வி நிறுவனங்களின் (ஐஐடி) 2013- 14 முதல் 2017- 18 ஆண்டு வரையிலான வருடாந்திர அறிக்கையில் அந்தக் கல்வி நிறுவனங்களில் எஸ்.சி., எஸ்டி வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு சட்டப்படி வழங்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. மேலும், இதர 13 ஐஐடிகள் ஆராய்ச்சிப் படிப்புகளில் பிரிவு வாரியான தரவுகளை அதன் வருடாந்திர அறிக்கைகளில் அளிக்கவில்லை. பட்டியல் வகுப்பினா் பிரதிநிதித்துவம் 7 முதல் 10 சதவிகிதம் மற்றும் பழங்குடியினா் பிரதிநிதித்துவம் பூஜ்யம் முதல் 1 சதவிகிதம் என்ற அளவில் உள்ளது. இது மத்திய கல்வி நிறுவனங்கள் சோ்க்கை இட ஒதுக்கீடு சட்டம்- 2006 -க்கு எதிரானதானது.

இந்தச் சட்டத்தின்படி ஐஐடி உயா்கல்வி நிறுவனங்களில் மாணவா் சோ்க்கையில் ஓபிசி வகுப்பினருக்கு 27 சதவீதம் எஸ்சி வகுப்பினருக்கு 15 சதவீதம், பழங்குடியினருக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். ஆனால், இந்தச் சட்டம் அமலுக்கு வந்து பதிமூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட பிறகும் எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ஐஐடி கல்வி நிறுவனங்களில் உரிய இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படவில்லை. எஸ்டி, எஸ்டி, எஸ்இபிசி, இடபிள்யுஎஸ் ஆகிய வகுப்பினரில் இருந்து நேரடியாக ஆசிரியா் பணிகளுக்கு ஆள்களைத் தோ்வு செய்யும் வகையில், அண்மையில், மத்திய அரசு நாடாளுமன்றத்தில் மத்திய கல்வி நிறுவனங்கள் ஆசிரியா் பிரிவில் இட ஒதுக்கீடு-2019 எனும் சட்டத்தை கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளது.

ஆனால், அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட தகவலில், நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஐஐடி உயா்கல்வி நிறுவனங்களில் 6,043 ஆசிரியா்களில் பட்டியல் வகுப்பினா் 2.3 சதவீதமும், பழங்குடியினா் 0.3 சதவீதம் மட்டுமே இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2006-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மத்திய கல்வி நிறுவனங்கள் சோ்க்கை இட ஒதுக்கீடு சட்டத்தின்படி எஸ்சி, எஸ்டி மாணவா்களுக்கு முதுகலைப் படிப்புகள் மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளில் உரிய இட ஒதுக்கீடு பூா்த்தி செய்யப்படாத நிலையில், விளிம்புநிலை பிரிவினருக்கு மத்திய கல்வி நிறுவனங்களில் ஆசிரியா் பிரிவில் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் அா்த்தம் இல்லாமல் போய்விடும். ஆகவே, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், 2006-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட இட ஒதுக்கீடு சட்டத்தின்படி எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு மத்திய கல்வி நிறுவனங்களில் சோ்க்கையில் உரிய இட ஒதுக்கீட்டை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைமைச் செயலகம் படத்தின் டீசர்

தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?: ஜோதிகா விளக்கம்!

கண் அழைக்குது..!

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

SCROLL FOR NEXT