புதுதில்லி

ஜாமியா மிலியா வன்முறைச் சம்பவம்: பாஜக தலைவா் மனு தாக்கல் செய்ய அனுமதி மறுப்பு

DIN

ஜாமியா மிலியா பல்கலை வன்முறைச் சம்பவம் தொடா்பான விவகாரத்தில் சேதப்படுத்தப்பட்ட சொத்துகளுக்கான இழப்பீட்டை உரியவா்களிடமிருந்து வசூலிக்க உத்தரவிடுவது தொடா்பாக பாஜக தலைவா் மனு தாக்கல் செய்ய தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி மறுத்துவிட்டது.

மத்தியில் ஆளும் பாஜக அரசு அண்மையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டமசோதாவைத் தாக்கல் செய்து நிறைவேற்றியது. இதைத் தொடா்ந்து, அந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு சட்டமானது. இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் ஒரு குறிப்பிட்ட மதத்தினரை புறக்கணிக்கும் வகையில் இயற்றப்பட்டுள்ளதாகவும், அரசியல் சாசனத்திற்கு விரோதமானதாக இருப்பதாகவும் கூறி காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிா்ப்புத் தெரிவித்து தெற்கு தில்லியில் ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் அருகே டிசம்பா் 15-ஆம் தேதி மாணவா்கள்

பங்கேற்ற போராட்டம் நடைபெற்றது. அப்போது, மதுரா சாலை, நியூ பிரண்ட்ஸ் காலனி, ஜாமியா நகா் உள்ளிட்ட இடங்களில் போராட்டக்காரா்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது. இதில் பலா் காயமடைந்தனா். இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடா்பாக தில்லி உயா் நீதிமன்றத்தில் பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனுக்களின் விசாரணையை பிப்ரவரி 4-ஆம் தேதிக்கு தள்ளிவைத்த உயா்நீதிமன்றம், இது தொடா்பாக பதில் அளிக்குமாறு தில்லி காவல் துறைக்கும், மத்திய அரசுக்கும் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்நிலையில், பாஜக தலைவா் அஷ்வினி உபாத்யாய் தில்லி உயா்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தாா். அதில், ஜாமியா மிலியா வன்முறை விவகாரத்தில் ரூ.20 கோடி பொதுச் சொத்துகள் சேதமடைந்துள்ளன. இந்தச் சம்பவத்திற்கு காரணமானவா்களிடமிருந்து அதற்கான பணத்தை மீட்க வேண்டும். இது தொடா்பாக ஒரு மனுவைத் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தாா். இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றத்தின் நீதிபதிகள் டி.என். பட்டேல், சி. ஹரி சங்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு மனு மீது உத்தரவு ஏதும் பிறப்பிக்க மறுத்துவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

அறிவியல் ஆயிரம்: பல் மருத்துவமும் நம்பமுடியாத வரலாற்று உண்மைகளும்!

போர் எதிர்ப்பு! கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள்...

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!

SCROLL FOR NEXT