முகப்பு
புதுதில்லி

நெல், கோதுமை கொள்முதல் விலையை உயர்த்த தில்லி அரசு முடிவு

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். ஸ்வாமிநாதனின் பரிந்துரையின் படி, நெல், கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு

Updated On : 25 பிப்ரவரி 2019, 7:09 am IST
பகிர்:

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். ஸ்வாமிநாதனின் பரிந்துரையின் படி, நெல், கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு கொள்முதல் விலையை உயர்த்த தில்லி அரசு முடிவு செய்துள்ளதாக தில்லி அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுதொடர்பான அமைச்சரவைக் குறிப்பை தயாரிக்க தில்லி வேளாண் துறைக்கு அத்துறையின் அமைச்சர் கோபால் ராய் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  
முதல்வர் விவசாயத் திட்டத்தின் கீழ் இந்த புதிய திட்டம் செயல்படுத்த தில்லி அரசு திட்டமிட்டுள்ளது. விவசாயிகளின் வேளாண் உற்பத்திக்காகும் செலவைவிட குறைந்தபட்சம் 50 சதவீதம் அதிகமாக குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும் என்று ஸ்வாமிநாதன் குழு பரிந்துரைத்திருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.