புதுதில்லி

"தேசப்பற்று கவிதை, கட்டுரைகளை எழுத்தாளர்கள் படைக்க வேண்டும்'

தேசப்பற்றுள்ள கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றை அதிக அளவில் கவிஞர்கள், எழுத்தாளர்கள் படைக்க வேண்டும்

DIN

தேசப்பற்றுள்ள கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றை அதிக அளவில் கவிஞர்கள், எழுத்தாளர்கள் படைக்க வேண்டும் என்று  தில்லி சட்டப்பேரவைத் தலைவர் ராம்நிவாஸ் கோயல் கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரபல கவிஞர் குமார் ஹிர்தயேஷ் எழுதிய "சேத்னா கி சுவர்' என்ற கவிதைப் புத்தகத்தை  சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் பேரவைத் தலைவர் ராம் நிவாய் கோயல் புதன்கிழமை  வெளியிட்டுப் பேசியதாவது:
சமூகத்தின் முன்னோடிகளாகத் திகழும் எழுத்தாளர்களே சமூகத்தின் கண்ணாடியாகவும் திகழ்கின்றனர். எழுத்தாளர்கள் எழுதும் விஷயங்களை சாதாரண மக்கள் அப்படியே பின்பற்றுகின்றனர். இதனால், எழுத்தாளர்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். தேசப்பற்றை வளர்க்கும் வகையில் படைப்புகளை படைக்க  எழுத்தாளர்களைக் கேட்டுக் கொள்கிறேன். இதுபோன்ற படைப்புகள் மூலமே இளம் சந்ததியினரிடம் தேசப் பற்று வளரும். மனிதாபிமானம், சமாதானம் ஆகியவற்றை வளர்க்கும் வகையிலான படைப்புகளும் அதிகளவில் உருவாக்கப்பட வேண்டும். மேலும், சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணும் வகையிலான படைப்புகளையும் படைக்க வேண்டும் என்றார் அவர்.  
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் தில்லி சட்டப்பேரவை  செயலர் பி.ஆர்.மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT