புதுதில்லி

தொழிற்சாலை விபத்து: இணை உரிமையாளர் கைது

DIN


மேற்கு தில்லி மோதி நகரில் உள்ள தொழிற்சாலையில் நிகழ்ந்த விபத்து தொடர்பாக அதன் இணை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு தில்லி மோதி நகரில் மின்விசிறிகளுக்கான தகடுகளைத் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் மின்விசிறித் தகடுகளை உருவாக்கும் எரிவாயு இயந்திரம் வியாழக்கிழமை இரவு திடீரென பலத்த சப்தத்துடன் வெடித்தது. இதில் ஆலை கட்டடத்தின் ஒருபகுதி இடிந்தது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த தொழிற்சாலையின் இணை உரிமையாளரான சுமித் குப்தா போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக காவல்துறை உயரதிகாரி கூறுகையில், இந்த விபத்தில் சிக்கிய தொழிற்சாலையின் உரிமையாளர்களில் ஒருவரான அங்கித் குப்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்றொரு உரிமையாளரான சுமித் குப்தா தலைமறைவாக இருந்தார். அவர் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்' என்றார் அவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் தீர்ப்பு

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

SCROLL FOR NEXT