புதுதில்லி

ரஃபேல் தணிக்கை விவரத்தை பகிர சிஏஜி மறுப்பு

DIN

ரஃபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தத்தை தணிக்கை செய்தது தொடர்பான விவரத்தை மத்திய கணக்குத் தணிக்கை அலுவலகம் (சிஏஜி) பகிர்ந்து கொள்ள மறுத்துவிட்டது.
இதுதொடர்பான விவரத்தை சிஏஜி அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் புணேயை சேர்ந்த சமூக ஆர்வலர் விஹார் துர்வே கோரியிருந்தார்.
அதற்கு சிஏஜி அலுவலகம் அளித்திருக்கும் பதிலில், "ஒப்பந்தத்தை தணிக்கை செய்யும் அலுவல் நடைபெறுகிறது. அதுதொடர்பான அறிக்கை இன்னமும் இறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 8(1)(சி) பிரிவின்கீழ், தணிக்கை விவரத்தை அளிக்க முடியாது. அவ்வாறு அளிப்பது நாடாளுமன்ற உரிமையை மீறும் செயலாகும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதை கோரி கிராம மக்கள் மனு

மழை வேண்டி பெரம்பலூரில் சிறப்புத் தொழுகை

கடன் தொல்லை: இளைஞா் தற்கொலை

திருமானூா் அருகே குடிநீா் விநியோகிக்க கோரி சாலை மறியல்

மே 11-இல் பெரம்பலூா் அங்காளம்மன் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT