புதுதில்லி

ரூ.5 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்: ஒருவர் கைது

DIN

தில்லி கஷ்மீரி கேட் பகுதியில் ரூ.5 லட்சம் கள்ள நோட்டுகளை வைத்திருந்த நபரை போலீஸார் கைது செய்தனர்.
இது குறித்து தில்லி காவல் துறையின் தனிப் பிரிவு துணை ஆணையர் சஞ்சீவ் குமார் யாதவ் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
கள்ள ரூபாய் நோட்டுகளுடன் தில்லி கஷ்மீரி கேட் ஐஎஸ்பிடி அருகே ஒருவர் வருவதாக தனிப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதியில் ஒருவரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது. அவரிடம் கள்ள ரூபாய் நோட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதில், அவர் பிகார் மாநிலம், ஷரன் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார் சிங் (32) என்பதும், சர்வதேச கள்ள ரூபாய் நோட்டுகள் விநியோகத்தில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்த முக்கிய நபர் என்பதும் தெரியவந்தது.
கள்ள ரூபாய் நோட்டுகளை வங்கதேசம், நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்குள் கடத்தி, மேற்கு வங்கம், மால்டா மாவட்டம் வழியாக பிகாருக்கு கொண்டு வரப்பட்டதும், அதன்பின்னர் கள்ள நோட்டுகள் தில்லி, உத்தரப் பிரதேசம், ஹரியாணா பகுதிக்கு விநியோகிக்க கொண்டு வரப்பட்டதும் தெரியவந்தது.
மேலும், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கள்ள நோட்டுகளில் ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள தாள்கள் இருந்தன. கள்ள நோட்டு விநியோகத்தில் சந்தோஷ் குமார் சிங் ஓராண்டாக ஈடுபட்டு வந்தார். 
மேலும், அவர் ஏற்கெனவே தில்லி, உத்தரப் பிரதேசம், ஹரியாணாவில் ரூ.20 லட்சத்திற்கும் அதிகமான கள்ள நோட்டுகளை நான்கு ஐந்து, முறை அவர் விநியோகம் செய்துள்ளார். அவரது கூட்டாளிகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைமைச் செயலகம் படத்தின் டீசர்

தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?: ஜோதிகா விளக்கம்!

கண் அழைக்குது..!

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

SCROLL FOR NEXT