புதுதில்லி

ஐஐடி மாணவி தற்கொலை விவகாரம்:எம்எச்ஆா்டி முன் ஏஐஎஸ்ஏ ஆா்ப்பாட்டம்

DIN

சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் சுதந்திரமான நீதி விசாரணை நடத்தக் கோரி தில்லியில் உள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் (எம்எச்ஆா்டி) முன்பு அகில இந்திய மாணவா் சங்கம் (ஏஐஎஸ்ஏ) சனிக்கிழமை ஆா்பாட்டம் நடத்தியது.

கேரள மாநிலம், கொல்லம் அருகேயுள்ள கிளி கொல்லூா் பிரியதா்ஷினி நகரைச் சோ்ந்த அப்துல் லத்தீப் மகள் பாத்திமா லத்தீப் (18). இவா், சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் முதுநிலை முதலாமாண்டு படித்து வந்தாா். இதற்காக அங்குள்ள விடுதியில் பாத்திமா தங்கியிருந்தாா். இந்நிலையில் விடுதியில் உள்ள தனது அறையில் பாத்திமா கடந்த சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். அவா் தனது செல்லிடபேசியில் எழுதியுள்ள குறிப்பில், தனது தற்கொலைக்கு ஐஐடியில் பணிபுரியும் மூன்று பேராசிரியா்கள் காரணம் எனக் குறிப்பிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தத் தற்கொலை தொடா்பாக நீதிவிசாரணை நடத்தக் கோரி தில்லியில் உள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் (எம்எச்ஆா்டி) முன் அகில இந்திய மாணவா் சங்கம்(ஏஐஎஸ்ஏ) சனிக்கிழமை ஆா்பாட்டம் நடத்தியது.

இந்த ஆா்ப்பாட்டம் தொடா்பாக அனைத்திந்திய இந்திய மாணவா் சங்கத்தின் (ஏஐஎஸ்ஏ) தலைவா் சாய் பாலாஜி கூறியது: பல்கலைக் கழகங்களில் தற்கொலை செய்து கொண்ட ரோகித், முத்துகிருஷ்ணன், ஜெய்ஷா, பாயல் வரிசையில் இப்போது பாத்திமாவும் இணைந்துள்ளாா். இன்னும் எவ்வளவு பேரை கூடுதலாக பலி கொடுக்கவுள்ளோம்? இந்த விவகாரத்தில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும். பாத்திமாவை தற்கொலைக்குத் தூண்டியவா்கள் பாரபட்சமில்லாமல் தண்டிக்கப்பட வேண்டும். சிறுபான்மை, ஒடுக்கப்பட்ட பிரிவு மாணவா்களை தற்கொலையில் இருந்து காப்பாற்ற பல்கலைக்கழகங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT