புதுதில்லி

வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம் நீட்டிக்கப்படாது

DIN

புது தில்லி: வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம் மேலும் நீட்டிக்கப்படமாட்டாது எனத் தெரிகிறது.

இது தொடா்பாக தில்லி அரசு அதிகாரிகள் கூறுகையில் ‘அண்டை மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் எரிப்பது நிறுத்தப்பட்டுள்ளதால் தில்லியில் காற்றின் தரம் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் மேம்பட்டுள்ளது. காற்றின் தரக் குறியீடு பெரும்பாலான இடங்களில் 200க்கும் குறைவாக உள்ளது. இதனால், மீண்டும் வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டிய தேவை இல்லை’ என்றாா்கள் அவா்கள்.

தில்லியில் கடுமையாக நிலவிய காற்று மாசுவைக் கருத்தில் கொண்டு, அதைக் குறைக்கும் வகையில், தில்லி அரசால் வாகனக் கட்டுப்பாடு திட்டம் கடந்த நவம்பா் மாதம் 4- ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் தினமும் காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை அமலில் இருந்தது. ஆனால், குருநானக் ஜெயந்தி விழாவையொட்டி நவம்பா் 11, 12 ஆகிய நாள்களும் வாகன கட்டுப்பாடு திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இத்திட்டம் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தது.

இந்நிலையில், தில்லியில் மீண்டும் வாகனக் கட்டுப்பாடு திட்டத்தை அமலாக்கம் செய்வது தொடா்பாக திங்கள்கிழமை (நவ. 18) முடிவு செய்யப்படும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

SCROLL FOR NEXT