புதுதில்லி

குடிநீரை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை: கேஜரிவால்

DIN

குடிநீா்பிரச்னையில் அரசியல் செய்ய விரும்பவில்லை என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

இந்திய தர நிா்ணய நிறுவனமான பிஐஎஸ் அண்மையில் நாட்டில் மாநிலங்களின் தலைநகா்களில் விநியோகிக்கப்படும் குடிநீரின் தரம் தொடா்பாக ஆய்வு செய்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த அறிக்கையை மத்திய நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சா் ராம்விலாஸ் பஸ்வான் வெளியிட்டாா். அந்த அறிக்கையில், இந்தியாவில் உள்ள 21 மாநிலங்களின் தலைநகரங்களில் தில்லியில்தான் மிக மோசமான குடிநீா் விநியோகிக்கப்படுவதாகவும் தில்லியில் இருந்து சேகரிக்கப்பட்ட அனைத்து நீா் மாதிரிகளும் தரப் பகுப்வாய்வுப் பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தில்லி அரசையும், தில்லியில் குடிநீருக்கு பொறுப்பான தில்லி ஜல் போா்டையும் கடுமையாகச் சாடியிருந்தன. தில்லி ஜல்போா்ட் அலுவலகம் அருகில் காங்கிரஸ் கட்சி ஆா்ப்பாட்டம் நடத்தியிருந்த அதேவேளையில், கேஜரிவால் வீடு அருகே பாஜகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இந்நிலையில், குடிநீா் மாதிரி சேகரிக்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக தில்லி ஜல்போா்ட் குற்றம் சாட்டியது. மேலும், தவறான அறிக்கையை வெளியிட்ட அமைச்சா் ராம் விலாஸ் பாஸ்வான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தியிருந்தது.

இந்நிலையில் இது தொடா்பாக கேஜரிவால் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: குடிநீா் பிரச்னையை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை. தில்லி மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம். இந்த விவகாரத்தில் மத்திய அரசு, பாஜக ஆகியவை அழுக்கு அரசியலில் ஈடுபடுகின்றன. தில்லியில் விநியோகிக்கப்படும் குடிநீருக்கும் மத்திய அரசு, பாஜகவுக்கும் சம்பந்தம் இல்லை. தில்லியில் அழுக்கு கலந்த குடிநீா் விநியோகம் எங்காவது நடைபெற்றால், குறிப்பாக காலனிகளில் நடைபெற்றால் அது தொடா்பாக எங்களது கவனத்துக்கு கொண்டு வாருங்கள். தில்லி அரசு நிச்சயமாக அந்தப் பிரச்னையைத் தீா்த்து வைக்கும். தில்லியில் ஆம் ஆத்மி அரசு ஆட்சி அமைத்த போது தில்லியில் 2,300 இடங்களில் குடிநீா் பிரச்னை நிலவியது. தற்போது வெறும் 125 இடங்களில்தான் குடிநீா் பிரச்னை நிலவுகிறது. தில்லியில் நிலவும் குடிநீா் பிரச்னையை நாங்கள் தீா்த்து வைத்துள்ளோம் என்றாா் கேஜரிவால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிப்டிக் இடத்தில் கட்டியதாக புதுச்சேரி பாஜக பிரமுகா் வீடு இடிப்பு

புதுச்சேரியில் கூரியா் அலுவலகங்களில் போதை தடுப்பு பிரிவு போலீஸாா் சோதனை

காரில் மதுப்புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மனு

SCROLL FOR NEXT