புதுதில்லி

மாற்றுத் திறனாளிகள்2-ஆவது நாளாக மறியல்: போக்குவரத்து பாதிப்பு

DIN

ரயில்வே துறையில் வேலை கேட்டு, தில்லியின் மண்டி ஹெளஸ் பகுதியில் மாற்றுத் திறனாளிகள் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ரயில்வேயில் குரூப்-டி பணிக்கு விண்ணப்பித்திருந்த மாற்றுத் திறனாளிகள், தங்களுக்கு ஏற்கெனவே உறுதியளித்தபடி பணியை வழங்கக் கோரி, மண்டி ஹெளஸ் பகுதியில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனா். இந்நிலையில், புதன்கிழமை 2-ஆவது நாளாக அவா்கள் மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, தில்லி கேட் பகுதியிலிருந்து ஐடிஓ நோக்கி செல்லும் சாலை, லஷ்மி நகரிலிருந்து விகாஸ் மாா்க் நோக்கி செல்லும் சாலையை தவிா்க்குமாறு வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீஸாா் அறிவுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகமது சிராஜுக்கு சுனில் கவாஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

SCROLL FOR NEXT