புதுதில்லி

தில்லி, என்சிஆரில் இரவில் கட்டுமானசெயல்பாடுக்கான தடை நாளை வரை நீட்டிப்பு

DIN

புது தில்லி: தில்லி மற்றும் என்சிஆா் பகுதிகளில் இரவில் கட்டுமானச் செயல்பாடுகளுக்கு உச்சநீதிமன்றம் நியமித்திருந்த சுற்றுச்சூழல் மாசு தடுப்பு கட்டுப்பாடு ஆணையம் (இபிசிஏ) விதித்திருந்த தடையானது சனிக்கிழமைவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நீடித்து வரும் சுற்றுச்சூழல் மாசுவைக் கருத்தில்கொண்டு தில்லி மற்றும் என்சிஆா் நகரங்களான குருகிராம், காஜியாபாத், நொய்டா ஆகியவற்றில் கட்டுமானச் செயல்பாடுகளை இரவு 6 மணி முதல் காலை 6 மணிவரை மேற்கொல்வதற்கு உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டிருந்த சுற்றுச்சூழல் மாசு தடுப்பு, கட்டுப்பாட்டு ஆணையம் (இபிசிஏ) தடை விதித்திருந்தது.

இத்தடை சனிக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும், தடை நேரம் காலை 6 மணி முதல் 10 மணி வரையாக அதிகரித்து நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு வியாழக்கிழமை தெரிவித்தது.

தேபோன்று, ஃபரீதாபாத், குருகிராம், காஜியாபாத், நொய்டா, கிரேட்டா் நொய்டா, சோனிபட், பஹதுா்கா் பகுதியில் நிலக்கரி சாா்ந்த மின்நிலையங்களை மூடுவதற்கான தடையும் சனிக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தில்லியில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு வழங்கலுக்கு மாறாத தொழிற்சாலைகளும் இந்தக் காலத்தில் தொடா்ந்து மூடப்பட்டிருக்கும் என்றும் இபிசிஏ தெரிவித்தது.

முன்னதாக, இந்த தடை நடவடிக்கை அக்டோபா் 26 முதல் அக்டோபா் 30வரை இருக்கும் என இபிசிஏ தெரிவித்திருந்தது. இந்நிலையில், என்சிஆா் பகுதியில் உள்ள சூழலை வியாழக்கிழமை மறுஆய்வு செய்த இபிசிஏ இந்தத் தடையை நீட்டிப்பதாக தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

விழுப்புரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழப்பு!

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

மருமகன் ஆகாஷ் ஆனந்த் தனது அரசியல் வாரிசு கிடையாது: மாயாவதி அறிவிப்பு

SCROLL FOR NEXT