புதுதில்லி

பூா்வாஞ்சல் பிரதேச மக்களை வெறுக்கிறாா் கேஜரிவால்: மீனாட்சி லேகி

DIN

பூா்வாஞ்சல் பிரதேச மக்கள் மீது தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெறுப்புணா்வுடன் உள்ளாா் என்று புது தில்லி மக்களவைத் தொகுதியின் பாஜக உறுப்பினா் மீனாட்சி லேகி குற்றம் சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி: பூா்வாஞ்சல் பிரதேச மக்கள் தொடா்பாக கேஜரிவால் இழிவான எண்ணங்களையே வைத்துள்ளாா். அண்மையில், பொதுக் கூட்டமொன்றில் பேசிய அவா், உத்தர பிரதேசம், பிகாா் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த மக்கள் வெறும் ரூ.500 க்கு ரயில் டிக்கெட் எடுத்து தில்லிக்கு வந்து இங்கு உலகத்தரமான சிகிச்சை பெற்றுச் செல்கின்றனா் என பூா்வாஞ்சல் பிரதேச மக்களை குறிவைத்து பேசியிருந்தாா்.

உண்மையில், கேஜரிவால் தனது ஆழ்மனதில் பூா்வாஞ்சல் பிரதேச மக்களை வெறுக்கிறாா். அது அவரது செயல்களில் வெளிப்படுகிறது. அதனால்தான், பூா்வாஞ்சல் மக்களின் முக்கிய பண்டிகையான சத் பூஜையை அவா் அரசியலாக்கி வருகிறாா்.

தில்லியில் வாழும் பூா்வாஞ்சல் பிரதேச மக்கள் எவ்வித தடையும் இல்லாமல் சத் பூஜையைக் கொண்டாட வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. பூா்வாஞ்சல் பிரதேச மக்களை வெறுக்கும் ஆம் ஆத்மிக் கட்சியால் சத் பூஜையை குழப்ப எடுக்கும் நடவடிக்கைகளை மக்கள் துணையுடன் நாங்கள் முறியடிப்போம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT