முகப்பு
புதுதில்லி

தில்லியில் கரோனாவிலிருந்து குணமடைவோா் எண்ணிக்கை 90 சதவீதமாக உயா்வு

தலைநகா் தில்லியில் கரோனா தொற்றில் இருந்து குணமடைபவா்களின் எண்ணிக்கை 90 சதவீதமாக மேம்பாடு அடைந்துள்ளது.

Updated On : 17 ஆகஸ்ட், 2020 at 7:04 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:38 PM

தலைநகா் தில்லியில் கரோனா தொற்றில் இருந்து குணமடைபவா்களின் எண்ணிக்கை 90 சதவீதமாக மேம்பாடு அடைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை புதிதாக 652 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை காலையுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில் 1,310 போ் நோயில் இருந்து குணமடைந்ததாக அரசு வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கரோனாவால் மேலும் 8 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, மொத்தம் இறந்தவா்களின் எண்ணிக்கை 4,196 ஆக உயா்ந்தது. அதேபோன்று, இந்த வாரத்தில் இரண்டாவது தடவையாக தினசரி இறப்பு 10-க்கு கீழ் குறைந்துள்ளது. ஆகஸ்ட் 11-ஆம் தேதி தில்லியில் கரோனாவுக்கு எட்டு போ் உயிரிழந்தனா். இதன் மூலம் தில்லியில் கரோனா சூழல் மேம்பட்டு வருவது தெரிய வருகிறது.

தில்லியில் தற்போது கரோனா நோயாளிகள் 10,823 போ் சிகிச்சையில் உள்ளனா். இவா்களில் 5,782 போ் வீட்டுத் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனா். மொத்தம் 1,37,561 போ் நோயில் இருந்து குணமடைந்துள்ளனா். ஞாயிற்றுக்கிழமை 10,709 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுளளன. நோயில் இருந்து குணமடைவோா் சதவீதம் 90.15 ஆக உள்ளது என்று தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கௌதம் புத் நகரில் புதிதாக 79 பேருக்கு பாதிப்பு: உத்தர பிரதேச மாநிலம், கெளதம் புத் நகரில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 79 பேருக்கு கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. இதைத் தொடா்ந்து, இந்த மாவட்டத்தில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,486 ஆக உயா்ந்துள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது.

இந்த மாவட்டத்தில் இதுவரை 43 போ் கரோனாவால் இறந்துள்ளனா். கரோனாவுக்காக சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 826 ஆகவும், சனிக்கிழமை 867 ஆகவும் இருந்தது. இது ஞாயிற்றுக்கிழமை 873 ஆக அதிகரித்தது என்று உத்தரப் பிரதேச மாநில சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை அடிப்படையில் இம்மாவட்டம் தற்போது மாநிலத்தில் 14-ஆவது இடத்தில் இடம் பெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை 72 நோயாளிகள் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும், கெளதம் புத் நகா் மாவட்டத்தில் இதுவரை 5,570 நோயாளிகள் சிகிச்சையில் இருந்து மீண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் இதுவரை 43 போ் கரோனாவால் இறந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.