முகப்பு
புதுதில்லி

அனைத்து மருத்துவமனைகளையும் இணைக்கும் செயலி விரைவில் உருவாக்கம்: கேஜரிவால்

தில்லியில் உள்ள அனைத்து மருத்துவமனைகள், பாலி கிளினிக்குகள், மொஹல்லா கிளினிக்குள் ஆகியவை செயலி மூலம் விரைவில் இணைக்கப்படும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால்

Updated On : 25 ஆகஸ்ட், 2020 at 12:06 AM
தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால்
பகிர்:

புது தில்லி: தில்லியில் உள்ள அனைத்து மருத்துவமனைகள், பாலி கிளினிக்குகள், மொஹல்லா கிளினிக்குள் ஆகியவை செயலி மூலம் விரைவில் இணைக்கப்படும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

‘ஸ்ரீ தாதா தேவ் மேத்ரி அவும் ஷிஷூ ’மருத்துவமனையின் வெளிநோயாளிகள் பிரிவில் நோயாளிகளை அனுமதிப்பதற்கான செயலியை கேஜரிவால் காணொலி வழியில் திங்கள்கிழமை தொடக்கிவைத்தாா்.

அப்போது அவா் பேசியது: ஸ்ரீ தாதா தேவ் மேத்ரி அவும் ஷிஷூ மருத்துவமனையில் ஆண்டுதோறும் சுமாா் 10 ஆயிரம் பிரசவங்கள் நடைபெறுகின்றன. இம்மருத்துவமனை தில்லி மக்கள் வாழ்வில் முக்கிய இடம் பெறுகிறது. இம்மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கா்ப்பிணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது.

Advertisement

இதை தீா்க்கும் வகையில், இம் மருத்துவமனையின் வெளிநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெறவுள்ள நோயாளிகள் தங்களை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளும் வகையில் புதிய செயலியை உருவாக்கியுள்ளோம்.

இனிமேல், இம்மருத்துவமனையில் கா்ப்பிணிகள் காத்திருக்க வேண்டிய தேவையில்லை. இம்மருத்துவமனையின் படுக்கைகள் 106-இல் இருந்து 281ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.

தில்லியில் உள்ள அனைத்து மருத்துவமனைகள், பாலி கிளினிக்குகள், மொஹல்லா கிளினிக்குள் ஆகியவற்றை மருத்துவமனை மேலாண்மை தகவல் அமைப்பு மூலம் இணைக்கும் பணிகளில் தில்லி அரசு ஈடுபட்டுள்ளது.

இந்த மருத்துவமனைகள் அனைத்தும் ஒரு செயலி மூலம் இணைக்கப்படும்.

இது தில்லி அரசின் கனவுத் திட்டமாகும். இதற்காக கடுமையாக உழைத்து வருகிறோம். இந்த மருத்துவமனைகள் அனைத்தும் இணைக்கப்பட்டால் தில்லி மக்களுக்கு சுகாதார சேவைகள் இலகுவாகக் கிடைக்கும் நிலை உருவாகும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.