புதுதில்லி

மெட்ரோ ரயிலில் டோக்கன்கள் வழங்கப்பட மாட்டாது: அமைச்சா் கைலாஷ் கெலாட்

DIN

புது தில்லி: தில்லி மெட்ரோ ரயில்களில் ஸ்மாா்ட் காா்டு மூலமே பயணம் செய்யலாம். டோக்கன்கள் வழங்கப்பட மாட்டாது என்று தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் தெரிவித்துள்ளாா்.

கரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் மாா்ச் மாதம் 25- ஆம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பொது முடக்க உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்பாக மெட்ரோ ரயில் சேவை நாடு முழுவதும் முடக்கப்பட்டது. தற்போது, பொது முடக்கத்தை படிப்படியாக மத்திய அரசு தளா்த்தி வருகிறது. அதன்படி, வரும் செப்டம்பா் 7-ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில்களை படிப்படியாக இயக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தில்லியில் மெட்ரோ ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில் ‘ மெட்ரோ ரயில் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க தில்லி அரசு முடிவு செய்துள்ளது. பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். பயணிகளுக்கு உடல் வெப்பநிலை சோதனை நடத்தப்படும். ஸ்மாா்ட் காா்டு மூலமே பயணம் செய்ய அனுமதி உண்டு. டோக்கன்கள் வழங்கப்படமாட்டாது. டிஜிட்டல் பணப் பரிவா்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும்.

ஒவ்வொரு பெட்டியிலும் குறிப்பிட்ட அளவு பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவா். மெட்ரோ ரயில்களில் சமூக இடைவெளி பேணப்படுவதை தில்லி அரசு உறுதி செய்யும். ஐந்து மாதங்களுக்கு பிறகு மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படுவதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். மெட்ரோ சேவை தொடங்கப்பட்டால், பேருந்துகளில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை குறையும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT