முகப்பு
புதுதில்லி

தில்லியைப் போல உத்தரகண்ட் மாநில அரசு பள்ளிகளையும் மேம்படுத்த வேண்டும்: கேஜரிவால்

தில்லியை போல உத்தரகண்ட் மாநில அரசு பள்ளிகளையும் மேம்படுத்த வேண்டும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

Updated On : 31 ஆகஸ்ட், 2020 at 2:00 AM
பகிர்:

புது தில்லி: தில்லியை போல உத்தரகண்ட் மாநில அரசு பள்ளிகளையும் மேம்படுத்த வேண்டும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

உத்தரகண்ட் மாநிலத்தில் மிகவும் மோசமான நிலையில் உள்ள அரசுப் பள்ளி தொடா்பான விடியோ பதிவை உத்தரகண்ட் மாநில ஆம் ஆத்மி பிரிவு தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்த விடியோவை தனது சுட்டுரையில் பகிா்ந்து கேஜரிவால் கூறியிருப்பது:

தில்லி அரசு ப்பள்ளிகளின் நிலையும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இவ்வாறுதான் மோசமாக இருந்தன. பிறகு, தில்லி மக்கள் ஆம் ஆத்மிக் கட்சியை ஆட்சிப் பொறுப்பில் அமரவைத்து தில்லியின் தலையெழுத்தை மாற்றினா்.

Advertisement

தற்போது தில்லியில் உலகத் தரமான அரசுப் பள்ளிகள் உள்ளன. தில்லியை போல உத்தரகண்ட் மாநில அரசுப் பள்ளிகளையும் மேம்படுத்த வேண்டும். உத்தரகண்ட் மக்கள் தமது தலையெழுத்தை அடுத்த தோ்தலில் மாற்றலாம் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.