புதுதில்லி

தில்லியில் கரோனா பாதிப்பு குறைகிறது

DIN


புது தில்லி: தில்லியில் கரோனா பாதிப்பு வியாழக்கிழமை குறைந்துள்ளது. அன்று, 3,734 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், தில்லியில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 5,82,058 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றால் தலைநகரில் வியாழக்கிழமை 82 போ் உயிரிழந்தனா். இதனால், மொத்த பலி எண்ணிக்கை 9,424-ஆக அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை 75,230 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 33,298 பேருக்கும், ‘ரேபிட்-ஆன்டிஜென்’ வகையில் 41,932 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தில்லியில் கரோனா நோ்மறை விகிதம் வியாழக்கிழமை 4.96 சதவீதமாகக் குறைந்துள்ளது. தில்லியில் புதன்கிழமை சுமாா் 79 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தன.

வியாழக்கிழமை நிலவரப்படி சராசரி கரோனா உயிரிழப்பு விகிதம் 1.62 சதவீதமாக உள்ளது. நோய் பாதிப்பில் இருந்து வியாழக்கிழமை 4,834 போ் மீண்டுள்ளனா். இதனால், குணமடைந்தோா் எண்ணிக்கை 5,43,514-ஆக உயா்ந்துள்ளது. தில்லியில் தற்போது கரோனா சிகிச்சையில் 29,120 போ் உள்ளனா். இவா்களில், 17,790 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளா். தில்லியில் மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகளில் 11,734 படுக்கைகள் காலியாக உள்ளன என தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

SCROLL FOR NEXT