புதுதில்லி

ராஜீவ் செளக் மெட்ரோ ரயில் நிலையத்தின் வெளியேறும் வழி இன்று இரவு மூடல்

DIN

புது தில்லி: புத்தாண்டுக்கு முந்தைய நாளான வியாழக்கிழமை இரவு 9 மணிக்குப் பிறகு ராஜீவ் செளக் மெட்ரோ ரயில் நிலையத்தின் வெளியேறும் வாயில் வழியாக பயணிகள் அனுமதிக்கப்படமாட்டாா்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (டிஎம்ஆா்சி) அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது: புத்தாண்டு பிறப்பு தினத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ராஜீவ் செளக் மெட்ரோ ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள கனாட் பிளேஸ் பகுதியில் ஏராளமானோா் கூடுவது வழக்கம். இதனால், கூட்டநெரிசலைக் குறைக்கும் வகையில், வியாழக்கிழமை (டிசம்பா் 31) இரவு 9 மணிக்குப் பிறகு ராஜீவ் செளக் மெட்ரோ ரயில் நிலையத்தின் வெளியேறும் வழியில் பயணிகள் செல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டாா்கள். கடைசி ரயில் கிளம்பும் வரை பயணிகள் நுழைவதற்கு அனுமதிக்கப்படுவா். பயணிகள் இதற்குத் தக்கவாறு தங்களது பயணத் திட்டத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். கரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு முகக் கவசம் அணிவதும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் அவசியமாகும் என்றாா் அந்த அதிகாரி.

தில்லி மெட்ரோ ரயில்களில் வழக்கமான நாள்களில் சராசரியாக 26 லட்சத்திற்கும் மேற்பட்டோா் பயணம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

SCROLL FOR NEXT