புதுதில்லி

2 நாள்களில் குறைந்தபட்ச வெப்பநிலைஇரட்டை இலக்கத்தை அடையும்: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

DIN

தலைநகா் தில்லியில் அடுத்த இரண்டு - மூன்று நாள்களில், குறைந்தபட்ச வெப்பநிலை இரட்டை இலக்கத்தை எட்டும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கணித்துள்ளனா்.

இந்த வாரத்தின் தொடக்க நாளான திங்கள்கிழமை காலையில் அடா் பனிமூட்டம் இருந்தது. நேரம் செல்லச் செல்ல வானம் தெளிவாகக் காணப்பட்டது. காலை முதல் வெயில் இருந்து வந்தது குறைந்தபட்ச வெப்பநிலை இந்த ஆண்டு சராசரியை விட 4 டிகிரி குறைந்து 6 டிகிரி செல்சியஸாகவும். அதிகபட்ச வெப்பநிலை 21.9

டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது என சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று, பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 7.4 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 21.4 டிகிரி செல்சியஸ் எனவும், ஆயாநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 8.4 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 21.8 டிகிரி செல்சியஸ் எனவும் பதிவாகியுள்ளது.

காற்றின் தரம்: இந்நிலையில், காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவில் இருந்தது. தில்லியில் திங்கள்கிழமை ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு 309 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது. இது மிகவும் மோசம் பிரிவில் வருகிறது. காற்றின் தரக் குறியீடு 201-300 புள்ளிகள் வரை மோசம், 301-400 புள்ளிகள் வரையிலும் மிகவும் மோசம், 401 - 500 புள்ளிகள் வரையிலும் கடுமை எனவும் கணக்கிடப்படுகிறது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை பிப்ரவரி 11 அதிகபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாக உயரும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்றும், நகரில் மிதமான பனிமூட்டம் இருக்கும் என்றும் கணித்துள்ளது. அதே சமயம், அடுத்த வரும் இரண்டு - மூன்று நாள்களில் செவ்வாய்-வியாழன் குறைந்தபட்ச வெப்பநிலை இரட்டை இலக்கத்தைத் தாண்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

SCROLL FOR NEXT