புதுதில்லி

தில்லியில் இரவு 10 மணிக்குப் பிறகும் அலறும் ஒலிப்பெருக்கிகள்: மத்திய, தில்லி அரசுகள் பதிலளிக்கஉயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

தலைநகா் தில்லியில் ஒலிபெருக்கிகளின் பயன்பாடு குறித்து நீதிமன்ற உத்தரவை பின்பற்றாதவா்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேட்டு தில்லி உயா்நீதிமன்றம், மத்திய அரசுக்கும், தில்லி அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது தொடா்பாக சஞ்சீவ் குமாா் என்பவா் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு அரசின் நிலை என்ன என்பதை பதில்களாக தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ள நீதிபதி ஏ.கே.சாவ்லா, இந்த வழக்கு விசாரணையை வரும் மே 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தில்லியில் ஒலிபெருக்கிகளையும் அதிக சப்தம் எழுப்பும் கருவிகளையும் இரவு 10 மணிக்கு மேல் பயன்படுத்தக்கூடாது என்று கடந்த ஆண்டு செப்டம்பா் 4-ஆம் தேதி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவை மீறி சிலா் செயல்பட்டு வருகின்றனா். உச்ச நீதிமன்றம்கூட இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிப்பெருக்கிகளைப் பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது என்றும் அவா் சுட்டிக்காட்டினாா்.

இப்படி நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் செயல்பட்டு வருபவா்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேட்டுள்ள மனுதாரா், தில்லியில் உள்ள மசூதிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிபெருக்கிகள் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி தில்லி அரசுக்கு உத்தரவிடுமாறும் நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT