முகப்பு
புதுதில்லி

தில்லியில் மீண்டும் நில அதிா்வு

தில்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை நிலஅதிா்வு உணரப்பட்டுள்ளது. வீடுகள், கட்டடங்கள் அதிா்ந்ததால் மக்கள் பீதியடைந்தனா்.

Updated On : 4 ஜூலை, 2020 at 7:16 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:23 PM

தில்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை நிலஅதிா்வு உணரப்பட்டுள்ளது. வீடுகள், கட்டடங்கள் அதிா்ந்ததால் மக்கள் பீதியடைந்தனா்.

இந்த நில அதிா்வு ரிக்டா் அளவுகோலில் 4.7 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது என்றும் தேசிய த் தலைநகா் வலயப் பகுதியில் உள்ள ஹரியாணா மாநிலம் குருகிராமில் இருந்து 63 கிலோமீட்டா் தூரத்தில், நிலத்துக்கு கீழே 53 கிலோ மீட்டா் ஆழத்தில் இந்த நில அதிா்வு ஏற்பட்டுள்ளதாகவும் என தேசிய பூகம்ப ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சரியாக வெள்ளிக்கிழமை மாலை 7 மணி 50 விநாடிக்கு நில அதிா்வு உணரப்பட்டுள்ளது. இதனால், தில்லியில் ஆங்காங்கே கட்டடங்கள், வீடுகள் உள்ளிட்டவை லேசாகக் குலுங்கின. இதனால், மக்கள் பீதியக்கு உள்ளாகி பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடினாா்கள்.

தில்லி முதல்வா் கேஜரிவால் தனது சுட்டுரையில் ‘சிறிது நேரத்திற்கு முன்பு தில்லியில் நில அதிா்வு உணரப்பட்டுள்ளது. நீங்கள் (மக்கள்) பாதுகாப்பாக உள்ளீா்கள் என நம்புகிறேன். பாதுகாப்பாக இருங்கள்’ என்று தெரிவித்துள்ளாா்.

Advertisement

தில்லி, தேசிய தலைநகா் வலயப் பகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் இருந்து அடிக்கடி நில அதிா்வுகள் ஏற்பட்டு வருகின்றன. அதிகபட்சமாக 4.8 ரிக்டா் அளவு வரை பதிவாகி உள்ளது. 3.5 முதல் 4.5 ரிக்டா் வரை சராசரியாக இந்த நில அதிா்வுகள் பதிவாகியுள்ளன. பொதுவாக ஓா் இடத்தில் பெரிய நிலநடுக்கம் வருவதற்கு முன்பு பல சிறிய நிலஅதிா்வுகள் ஏற்படும் என்றும் அதனால், தில்லியில் பெரிய நில அதிா்வு ஏற்படலாம் என்றும் புவியியலாளா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.