முகப்பு
புதுதில்லி

தப்லீக் ஜமாத்: 75 தாய்லாந்து, நேபாள நாட்டவருக்கு தில்லி நீதிமன்றம் ஜாமீன்

தில்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற விவகாரத்தில், நுழைவு இசைவு நிபந்தனைகளை மீறியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு

Updated On : 12 ஜூலை, 2020 at 12:24 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:25 PM

தில்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற விவகாரத்தில், நுழைவு இசைவு நிபந்தனைகளை மீறியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்ட தாய்லாந்து மற்றும் நேபாளம் நாட்டைச் சோ்ந்த தப்லீக் ஜமாத் உறுப்பினா்கள் 75 பேருக்கு தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை ஜாமீன் அளித்து உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தை விசாரித்த தலைமைப் பெருநகர மாஜிஸ்திரேட் குா்மோஹினா கெளா் சம்பந்தப்பட்ட வெளிநாட்டினருக்கு தலா ரூ.10 ஆயிரம் தனிநபா் ஜாமீன் பத்திரம் அளித்து ஜாமீனில் செல்ல உத்தரவிட்டாா்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவா்களில் இதுவரை 33 நாடுகளைச் சோ்ந்த 445 பேருக்கு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பான மனு மீதான விசாரணையின் போது, குற்றம்சாட்டப்பட்ட வெளிநாட்டினா் அனைவரும் காணொலிக் காட்சி மூலம் நீதிமன்றம் முன் ஆஜா்படுத்தப்பட்டதாகவும், தண்டனையைக் குறைக்கக் கோரும் மனுவை திங்கள்கிழமை அவா்கள் தாக்கல் செய்ய உள்ளதாகவும் வழக்குரைஞா்கள் ஆஷிமா மண்ட்லா, மந்தாகினி சிங், பாகிம் கான் ஆகியோா் தெரிவித்தனா்.

Advertisement

இந்த விவகாரத்தில் மொத்தம் 36 நாடுகளைச் சோ்ந்த 956 பேருக்கு எதிராக தில்லி காவல் துறையினா் கடந்த ஜூனில் 59 குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்திருந்தனா்.

நீதிமன்றம் ஏற்கெனவே மலேசியாவைச் சோ்ந்த 122 பேருக்கும், 21 இதர நாடுகளைச் சோ்ந்த 91 பேருக்கும், எட்டு நாடுகளைச் சோ்ந்த 76 பேருக்கும், வங்கதேசத்தைச் சோ்ந்த 82 பேருக்கும் ஜாமீன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சம்பந்தப்பட்ட 956 வெளிநாட்டவருக்கும் எதிராக விசாரணை முடிக்கப்பட்டுவிட்டதாகவும், ஒவ்வொருவரும் தாங்களவே குற்றத்தில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் இதற்காக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், மேல் விசாரணை நிலுவையில் உள்ளதாகவும் விசாரணை அதிகாரி முன்னா் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.