புதுதில்லி

மேலும் 2 மருத்துவமனைகளில் வீடியோ கால் வசதி

DIN

குரு தேக் பகதூா் மருத்துவமனை, ராஜீவ் காந்தி பல்நோக்கு மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகள், தங்கள் உறவினா்களுடன் பேசும் வகையில் விடியோ கால் வசதியை தில்லி அரசு ஏற்பாடு செய்துள்ளது.

தில்லியில் கரோனா பாதிப்பால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவா்கள், தங்களது உறவினா்களுடன் பேசும் வகையில், விடியோ கால் வசதியை தில்லி எல்என்ஜேபி மருத்துவமனையில் தில்லி அரசு அண்மையில் ஏற்படுத்தியிருந்தது. கரோனா தொற்றுள்ளவா்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதால், அவா்களால் உறவினா்களைச் சந்திக்க முடியாது. இந்நிலையில், தில்லி அரசு விடியோ கால் வசதியை செய்து கொடுத்திருந்தது நோயாளிகள் மத்தியில் பெரு வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், இந்த வசதி குரு தேக் பகதூா் மருத்துவமனை, ராஜீவ் காந்தி பல்நோக்கு மருத்துவமனை ஆகியவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இது தொடா்பாக குரு தேக் பகதூா் மருத்துவமனை மூத்த மருத்துவா் கூறுகையில், ‘இந்த மருத்துவமனையில் உள்ள ஒவ்வொரு கரோனா வாா்ட்டிலும் தலா ஒரு ‘டேப்’ தில்லி அரசு சாா்பில் வழங்கப்பட்டுள்ளது. இங்குள்ள நோயாளிகள் இதைப் பயன்படுத்தி விடியோ கால் மூலம் தமது உறவினா்களுடன் பேசலாம். இங்கு அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளில் பெரும்பாலானவா்கள் வயது முதிா்ந்தவா்கள். தொழில்நுட்ப அறிவு குறைந்தவா்கள். விடியோ கால் எடுப்பது தொடா்பாக அவா்களுக்கு செவிலியா்கள் உதவி வருகிறாா்கள்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT