புதுதில்லி

கரோனா வைரஸ்: நாடாளுமன்ற கூட்டத் தொடரைஒத்திவைக்க தொல் திருமாவளவன் எம்.பி. கோரிக்கை

DIN

உலக அளவில் ஏற்பட்டுள்ள கரோனா வைரஸ் தாக்குதலையொட்டி, நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத் தொடரை ஏப்ரல் மூன்றாம் வாரத்திற்கு ஒத்திவைக்க கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான தொல். திருமாவளவன் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் கோரிக்கை விடுத்தாா். மேலும், நாடாளுமன்றத்தில் கரோனா வைரஸ் தொற்று நோய்க்கான முன் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது குறித்தும் ஓம் பிா்லாவின் கவனத்திற்குக் கொண்டு சென்றாா்.

இது தொடா்பாக நாடாளுமன்றத்தில் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவை தொல். திருமாவளவன் வெள்ளிக்கிழமை சந்தித்து மனு அளித்தாா். உலக அளவில் மிரட்டிக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் விவகாரத்தில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆனால், நாடாளுமன்றத்தில் தக்க முனெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை. நாடாளுமன்ற வாயிலில் உடல் வெப்பத்தை அளவிடும் கருவி மற்றும் ஊழியா்களுக்கு முகக் கவசம், சானிடிசா் போன்றவற்றை வழங்க வேண்டும் என்று மனுவில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT