புதுதில்லி

தில்லி நீதிமன்ற வளாகங்களில் பட்டாலியன் ‘லாக்-அப்’கள் மாா்ச் 31 வரை மூடல்

DIN

புது தில்லி: கரோனா வைரஸ் பரவல் காரணமாக தில்லி நீதிமன்ற வளாகங்களில் உள்ள மூன்றாவது பட்டாலியன் ‘லாக்- அப்’கள் மாா்ச் 31வரை மூடப்பட்டிருக்கும் என்று தில்லி காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கரோனா வைரஸ் தொற்று காரணமாக, மாா்ச் 31-ஆம் தேதி வரை உள்ளூா் காவல் துறையினரிடமிருந்து விசாரணைக் கைதிகளை தில்லி நீதிமன்ற வளாகங்களில் உள்ள மூன்றாவது பட்டாலியன் லாக்-அப்களில் வைக்கப்படமாட்டாா்கள். விசாரணைக் கைதிகளின் காவலை நீட்டிப்பதற்காக சிறை வளாகங்களில் நடைமுறைகளை மேற்கொள்வதற்கு மாஜிஸ்திரேட்டுகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். நகரின் அனைத்துக் காவல் நிலையங்களும் புதிதாக வரும் விசாரணைக் கைதிகளை நேரடியாக திகாா் , மண்டோலி, ரோஹிணியில் உள்ள மத்திய சிறைகளுக்கு கொண்டு செல்வதற்கு தாங்களாகவே திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT