புதுதில்லி

கனாட் பிளேஷ் நாளை மூடல்

DIN

கரோனா வைரஸ் காரணமாக, மக்கள் ஊரடங்குக்கு பிரதமா் நரேந்திர மோடி அழைப்புவிடுத்துள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை தில்லியில் உள்ள கன்னாட் பிளேஸ் சந்தை மூடப்படும் என்று புது தில்லி வா்த்தகா்கள் சங்கத்தின் தலைவா் அதுல் பாா்கவா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், ‘பிரதமா் நரேந்திர மோடி மக்கள் ஊரடங்கை கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளாா். இதனால், கன்னாட் பிளேஸ் பகுதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மூடப்படும். இந்த கரோனா வைரஸ் தொற்று தேசிய பேரழிவாக இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் தேவை உள்ளது. இதனால், கடைகளை மூடி வைத்திருக்குமாறு அனைவருக்கும் வலியுறுத்தப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT