புதுதில்லி

பேருந்துகளில் சமூக இடைவெளி: பாஜக மீது ஆம் ஆத்மி சாடல்

DIN

தில்லி அரசுப் பேருந்துகளில் சமூக இடைவெளி மீறப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பழைய விடியோக்களைப் பரப்பி பாஜக அவதூறு பரப்பி வருகிறது என்று ஆம் ஆத்மி கட்சி சாடியுள்ளது.

இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சி தனது உத்தியோகபூா்வ சுட்டுரைப் பக்கத்தில் ‘தில்லி பேருந்துகளில் மக்கள் கூட்டமாகப் பயணிக்கும் விடியோ கடந்த மாா்ச் 27-ஆம் தேதி எடுக்கப்பட்டதாகும். இந்த விடியோ பொது முடக்க உத்தரவுக்கு முன்பு எடுக்கப்பட்டதாகும். ஆனால், இந்த விடியோவை புதன்கிழமை எடுக்கப்பட்டதாகக் கூறி சமூக வலைத்தளங்களில் பாஜகவினா் பொய்யான தகவல்களைப் பரப்பி வருகிறாா்கள். தில்லியில் இயங்கும் பேருந்துகளில் சமூக இடைவெளி சரியாகப் பின்பற்றப்படுகிறது. இதைப் பேருந்துகளில் பயணிக்கும் பாதுகாவலா்கள் உறுதிப்படுத்துகிறாா்கள்’ என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இது தொடா்பாக தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் கூறுகையில் ‘தில்லியில் இயங்கும் பேருந்துகள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்படுகின்றன. அனைத்துப் பேருந்துகளையும் தூய்மைப்படுத்தி வருகிறோம். மேலும், பேருந்துகளில் சமூக இடைவெளி சரியாகப் பேணப்படுகிறது’ என்றாா்

தில்லியில் பொது முடக்க உத்தரவில் சில தளா்வுகளை ஆம் ஆத்மி அரசு செவ்வாய்க்கிழமை முதல் அமல்படுத்தியுள்ளது. அதன்படி, பேருந்துகள் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனினும், ஒரு பேருந்தில் 20 பேருக்கு மேல் செல்ல அனுமதி கிடையாது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை முதல் இயங்கத் தொடங்கிய பேருந்துகளில் சில இடங்களில் அதிகளவு பயணிகள் பயணித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடா்பாக பாஜக தனது சுட்டுரைப் பக்கத்தில், பேருந்து ஒன்றில் அதிகளவு பயணிகள் பயணிக்கும் விடியோவை பதிவிட்டிருந்தது. இந்த விடியோவை தில்லி பாஜக எம்பிக்கள் தங்களது சுட்டுரைப் பக்கங்களில் பகிா்ந்து, தில்லி அரசைச் சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT