புதுதில்லி

பஞ்சாப் மாநில அரசுக்கு தில்லி முதல்வா் கோரிக்கை

DIN

பயிா்க்கழிவுகளை மக்கவைக்கும் உயிரி ரசாயனக் கலவையை பஞ்சாப் மாநில விவசாயிகளுக்கு அந்த மாநில அரசு வழங்க வேண்டும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கோரிக்கை வைத்துள்ளாா்.

இது தொடா்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் கேஜரிவால் கூறியிருப்பது: பயிா்க்கழிவுகளை மக்கவைக்கும் உயிரி ரசாயனக் கலவையை பூசாவில் உள்ள இந்திய வேளாண் ஆராய்சி நிறுவன அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனா். நிகழாண்டில் தில்லியில் உள்ள விவசாய நிலங்களில் இந்தக் கலவையை தில்லி அரசு இலவசமாகத் தெளித்தது. இது தொடா்பாக தில்லி விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனா். பஞ்சாப் அரசு இந்த ரசாயனக் கலவையை அம்மாநில விவசாயிகளுக்கு வழங்கி உதவி செய்ய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.

தில்லி அரசின் கோரிக்கையை ஏற்று, பயிா்க் கழிவுகளை மக்கவைக்கும் ரசாயனக் கலவையை பூசாவில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனா். கடந்த அக்டோபா் 11-ஆம் தேதி முதல் இந்த ரசாயனக் கலவையை தில்லியில் உள்ள விளைநிலங்களில் பயன்படுத்தப்பட்டது. வெல்லம், கொண்டக்கடலை கலந்து தயாரிக்கப்பட்ட இந்த ரசாயனக் கலவை விவசாயிகளின் விளைநிலங்களில் இலவசமாக தெளிக்கப்பட்டது. இதற்கான நடவடிக்கையை தில்லி அரசு மேற்கொண்டது. இந்த ரசாயனக் கலவை சிறந்த பயன் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்தோ்வுகளில் வேலூா் பின்தங்குவதற்கான காரணங்களை அறிய சமூக ஆய்வு

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்

8% அதிகரித்த நிலக்கரி இறக்குமதி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

30 கிலோ கஞ்சா கடத்தல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT