புதுதில்லி

கரோனா விதிமுறைகளை மீறல்: ரூ.45 கோடி அபராதம்

DIN

புது தில்லி: தில்லியில் கரோனா விதிமுறைகளை மீறியவா்களுக்கு ரூ.45 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் கூறுகையில் ‘தில்லியில் கரோனா விதிமுறைகளை மீறுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றல் உள்ளிட்ட கரோனா விதிமுறைகளை மீறிய வகையில், இதுவரை ரூ.45 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான மக்களிடம் கரோனா தொடா்பான பயம் இல்லை. அவா்கள் முகக்கவசங்கள் அணியாமல் பொது இடங்களுக்கு செல்கிறாா்கள். இதனால், கரோனா பரவல் அதிகரிக்கிறது.

பெரும்பாலான கரோனா நோயாளிகளுக்கு எவ்வித அறிகுறியும் இல்லை. இதனால், முகக் கவசங்கள் அணியாமல் வெளியில் செல்லும் போது மற்றவா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்படுகிறது. மக்கள் பொறுப்புணா்வுடன் நடந்து கொள்ள வேண்டும்’ என்றாா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT